சுத்தமான பசும்பாலினுள் இருக்கும் கலப்படம் இல்லா முயற்சிகள்

“நான் பால் விற்பனை சந்தையை இரண்டு விதங்களாக பார்க்கிறேன்—ஒன்று ஜல்லிக்கட்டுக்கு முன் மற்றொன்று ஜல்லிக்கட்டு பின்,” எனக் கூறுகிறார் உழவர் பூமியின் (UzhavarBumi) நிறுவனர் வெற்றிவேல் பழனி (Vetrivel Palani). 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றிவேலும் பங்கேற்றிருக்கிறார். “போராட்டத்தின் பொழுது விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளும் பேசப்பட்டன,” எனக் கூறுகிறார் அவர். உழவுத் தொழிலிலோ அல்லது பயிரிடுவதிலோ வெற்றிவேலுக்கு எவ்வித பின்புலமும் இல்லை. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டமானது […]