அண்ணன் – தங்கை இணைந்து உருவாக்கும் இதமான, வளங்குன்றா ஆடைகள்

ஒரு மதிய வேளையில் அருண் குமார் (Arun Kumar) என்பவரும் அவரின் தங்கை SP பொன்மணியும் (SP Ponmani) மதுரையில் சிறுவயதில் அவர்கள் வாழ்ந்து வளர்ந்த வீட்டை சுத்தம் செய்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது ஒரு பெட்டகத்தை அங்கு கண்டனர். அந்த பெட்டகமானது, அவர்கள் சிறுவயதில் அணிந்து இருந்த முற்றிலும் பருத்தியால் ஆன ஆடைகளால் நிரம்பி இருந்தது. “அந்த துணியானது மிகவும் மென்மையாகவும், 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் பயன்படுத்தக் கூடிய வகையில் இருந்தது,” என தங்கள் […]
தொண்டு ஆற்றும் குன்னூரின் வினோத உணவகம்

தமான குளிர் கொண்ட அமைதியான குன்னூர் மலைச் சரிவுகளில் — ராதிகா சாஸ்திரி என்பவரின் கொல்லைப்புறத்தில் — சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளை தன்வசம் ஈர்த்தவாறு, கதகதப்பான பழைய பாணியில் இருக்கும் செங்கல் சுவர்களுடன், வரவேற்கும் மஞ்சள் நிற விளக்குகளையும் மிக அழகான உட்புற கலைப் பொருட்களையும் கொண்டு இயங்கி வருகிறது – நம் கதையின் கருவான கஃபே டீயம் (Cafe Diem) எனும் உணவகம். “மலைபிரதேசத்தில் தான் வசிப்பேன் என்பதை நான் எப்பொழுதும் நன்கு அறிவேன்,” […]
மீமானிடர் (Superhuman) ஆவது எப்படி?

க்கி சானின் தீவிர பின்பற்றாளர் ஆன பதினாறு வயது விஷால் குமார் (Vishal Kumar) மணிக்கணக்கில் ஜாக்கி சானின் இசைவான நகர்வுகளை வலையொளியில் (Youtube) கண்டு அவற்றை பகுத்தாய்ந்து வந்தார். அவ்வாறு காண்கையில், வலையொளியின் பரிந்துரைக்கப்படும் காணொளிகள் (Videos) பகுதியில் தாண்டோட்டம் (பார்க்கூர் – Parkour) பற்றிய காணொளி ஒன்றை அவர் தற்செயலாக கண்டார். “நான் தீவிரமாக செய்து வரும் ஒரு செயலுக்கு உண்மையிலேயே ஒரு பெயர் இருப்பது எனக்கு அப்பொழுது தான் தெரிந்தது!” என நினைவு […]
பன்னாட்டு பயனர் கொண்ட உள்ளூர் அணியங்கள்

ன்னிந்தியர்கள் பெரும்பாலும் அவர்களின் பிறந்த ஊரின் பெயரைத் தங்களின் புனைபெயராக வைத்துக் கொள்வது வழக்கம். ஸ்ரீரங் (Srirang) என்றழைக்கப்படும் ஸ்ரீத்தி சடகோபன் (Srithi Sadagopan), தன் திருமணம் வரை தன் இளம்பருவத்தை திருச்சியில் உள்ள கோயில் நகரான ஸ்ரீரங்கத்திலேயே (Srirangam) கழித்தார். தன் வாழ்க்கையை மொத்தமாக திருப்பிப் போடப் போகும் ஒரு வாழ்க்கை கட்டத்திற்குள், கனிவான இருபத்து மூன்று வயது சிறு ஊரில் வளர்ந்த பெண்ணான ஸ்ரீத்தி சடகோபன் நுழையப் போகிறார் என அவர் அறிந்திருக்கவில்லை. உலகின் […]
வாயுஜல் (VayuJal): காற்றிலிருந்து குடிநீர்

ம் சந்திக்க போகும் குடிநீர் நெருக்கடிக்கு (water crisis) தொடர்ச்சியாக வளர்ந்து வரும் இந்த உருவாக்கம் ஒரு தீர்வாக இருக்கலாம். ரமேஷ் குமார் மனித நலன் (humanitarian) சார்ந்த இந்த சவாலுக்கு விடை காண எவ்வாறு முயல்கிறார் என்பதை பார்ப்போம். “நான் தான் குடும்பத்தில் முதல் பொறியாளர் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தின் (Indian Institute of Technology – IIT) முதல் பட்டதாரியும் கூட. என் அப்பா ஒரு விவசாயி மற்றும் நகைக் கடை […]
கண்ணாடி கலையில் கலக்கும் ராதிகா

நம்மில் பெரும்பாலானோர் கண்ணாடியை, எளிதில் உடையக்கூடியதாகவும், அச்சுறுத்தும் ஒரு பொருளாகவுமே எண்ணுவோம். ஆனால் கோலி சோடா கண்ணாடி கலைக்கூடத்தின் (Goli Soda Glass Studio) நிறுவனரான ராதிகா க்ரிஷ் (Radhika Krish) என்பவர் தன் அழகான கண்ணாடிக் கலையால் நம்முடைய அந்த எண்ணத்தை விரிசலடைய செய்கிறார். “ எனது சிறுப்பருவத்தில் நான் கண்ட “கோலி சோடா” புட்டிகள் (bottles) என் ஆவலைத் தூண்டுவதாக இருந்திருக்கின்றன. புட்டியிலிருந்து கோலியை வெளியில் எடுக்க நான் மணிக்கணக்கில் நேரம் செலவிட்டுள்ளேன்,” என […]
வாழ்க்கையின் விளையாட்டு: கோயம்புத்தூரின் பொம்மை வடிவமைப்பாளர்

பொம்மை வடிவமைப்புத் துறையில் கனகா ஆனந்த் அவர்களின் நியதி நம்மை அவரின் குழந்தைப்பருவக் காலத்துக்கு இட்டுச் செல்கிறது. இவர் இன்று மணியம்ஸ் (Maniams) என்றொரு தனித்துவமான வடிவமைப்பு நிறுவனம் வடிவம்பெற, தனக்கும் தன் மறைந்த சகோதரர் கார்த்திக் ஆனந்திற்கும் உதவியாக இருந்த சிறு சிறு நுணுக்கங்களை ஒருங்கிணைத்து தன் வாழ்க்கை சம்பவங்களை அழகாக நம் முன் விவரிக்கிறார். சிறு வயதிலிருந்து கனகாவை அறிந்தவர்கள் அவர் படைபாக்கத் தொழிற்துறையில் (Creative Industry) தடம் பதிப்பார் என்று கண்டறிந்தனர். மும்பையில் […]