ஆசிரியர்கள் இல்லை, புத்தகங்கள் இல்லை, பள்ளிக்கூட மணி இல்லை…

கோடிட்ட தாளில் பென்சில்கள் ஏற்படுத்திய சத்தம் அறையை நிரப்பியது. பம்பாய் வெல்ஃபேர் சொசைட்டி உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் மீனாக்ஷி (Meenakshi) படித்துக் கொண்டிருந்தார். ‘எனது பள்ளிக்கூடம்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதுமாறு ஆங்கில வகுப்பில் ஆசிரியர் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார். “என்னோட பள்ளிக்கூடத்துல ஆசிரியர்கள் இருக்க மாட்டங்க. பாடப் புத்தகங்கள் இருக்காது. பள்ளிக்கூட மணியும் இருக்காது. அதுல நிறைய மரங்களும், ஒவ்வொருத்தவங்க விருப்பப்பட்டத படிக்குறத்துக்கான நூலகமும், ஒரு பெரிய விளையாட்டு மைதானமும் இருக்கும்.” இதுவே மீனாக்ஷி […]

ஏற்பாட்டியல் தொழில்துறையின் வாய்ப்புகளை ஒளியமாக்கும் ஃபுல்ஃபிலி

“ஃபிரண்ட்ஸ் கூட சேர்ந்து பிஸ்னஸ் பண்ண வேண்டாம்னு தான் எல்லாரும் எப்போதும் சொல்வாங்க. ஆனா நான் அதை ஒத்துக்க மாட்டேன்,” என புன்முறுவல் செய்கிறார் ஃபுல்ஃபிலியின் தலைமை செயற்குழு அதிகாரியும் இணை நிறுவனருமான அசோக் விஸ்வநாத். ஃபுல்ஃபிலி என்பது சேவைத்துறைக்கென விரிவான மின்சார வாகனத் (EV-as-a-service) தளம் ஒன்றினை கட்டமைக்கும், சென்னையை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமாகும். ஒருமுறை வார இறுதியில் நண்பர்களுடன் விடுதி ஒன்றில் நிலவொளியில் நிறைவு (fulfilment) என்றால் என்ன என்று விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்த […]

இருபது ஆண்டுகள் கழித்து இறுதியாக ஃபினாலே(வில்) – அனுயா

அனுயா ரெட்டி (Anuhya Reddy) என்பவர் உலகளவில் காப்பி விற்பனையில் பெயர்போன ஸ்டார்பக்ஸின், லண்டனில் இருக்கும் கடைகளில் ஒன்றில் காப்பி தயாரிப்பவராக (barista) வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அமைதியான முனுமுனுப்புகளுக்கும், மேசைகளில் இருந்து வரும் தட்டச்சின் (keyboard) மென்மையான சத்தத்துக்கும் இடையே, புதிய காப்பிக் கொட்டைகளின் நறுமணம் க்ராய்சண்ட் (croissant) எனப்படும் பிறை வடிவ ரொட்டியின் மணத்துடன் காற்றில் பரவி மூக்கை துளைத்தது. கடல் தாண்டி பயணப்பட்டு, தான் இருக்கும் இவ்வூரில், என்னதான் இது ஓர் பகுதி […]

“மக்காத நெகிழி – மெட்ராஸுக்கு எதிரி”

“நீங்க முதன்முதல பயன்படுத்தின பல்துலக்கி இன்னும் இந்த பூமியில தான் இருக்கு,” என திவ்யா கூற அவரின் தற்காலிக விற்பனையகத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்த சிறியக் கூட்டமானது அவர் சொன்னதை உணர்ந்து வாயடைத்துப் போய் அதிர்ச்சியாக அவரை நோக்கினர். “நான் ரெண்டு மூங்கில் பல்துலக்கி வாங்கிக்குறேன். ஒன்னு எனக்கு அப்புறம் இன்னொன்னு என் நண்பருக்கு,” என கூட்டத்தில் இருந்து வந்த ஓர் குரல் நிலவிய அமைதியை உடைத்தது. அப்பொழுது பிரதீப்பும் திவ்யாவும் கையில் எடுத்துச் செல்லக் கூடிய […]

சுத்தமான பசும்பாலினுள் இருக்கும் கலப்படம் இல்லா முயற்சிகள்

“நான் பால் விற்பனை சந்தையை இரண்டு விதங்களாக பார்க்கிறேன்—ஒன்று ஜல்லிக்கட்டுக்கு முன் மற்றொன்று ஜல்லிக்கட்டு பின்,” எனக் கூறுகிறார் உழவர் பூமியின் (UzhavarBumi) நிறுவனர் வெற்றிவேல் பழனி (Vetrivel Palani). 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றிவேலும் பங்கேற்றிருக்கிறார். “போராட்டத்தின் பொழுது விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளும் பேசப்பட்டன,” எனக் கூறுகிறார் அவர். உழவுத் தொழிலிலோ அல்லது பயிரிடுவதிலோ வெற்றிவேலுக்கு எவ்வித பின்புலமும் இல்லை. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டமானது […]

இயற்கையோடு இணைந்து கற்றல்

“ஒரு நாள் நான் சின்ன பையனா இருக்க அப்போ—ஏழாம் வகுப்புல இருந்துருப்பேனு நினைக்குறேன், என் அம்மாவோட நண்பரின் அலுவலகத்துக்குப் போயிருந்தேன்,” என நினைவுக் கூறும் யுவன் ஏவ்ஸ் (Yuvan Aves), “நான் பெரியவனா ஆன அப்புறம் என்னவாக ஆசைபட்றேனு அங்க இருந்த யாரோ என்கிட்ட கேட்டாங்க.” “இயற்கையியலர் (naturalist) ஆகப் போறேன்!” என ஆர்வத்துடன் பதில் கூறிய அந்த சிறுவனைப் பார்த்து அனைவரும் ஏளனமாகச் சிரிக்கத் துவங்கினர். காரணம்—அது போன்ற பணிகளில் போதுமான சம்பளம் கிடைக்காது என்ற […]

உணவுக் கட்டுப்பாடுகளை உற்சாகமாக்கும் சுவைமிகு இனிப்புகள்

2013-ஆம் ஆண்டு. பெர்த் நகரில் உள்ள கர்டின் பல்கலைக்கழகத்தில் இருக்கும் குருத்தணு எனப்படும் ஸ்டெம் செல் ஆய்வு மையத்தில் வருகைத்தரு விரிவுரையாளராக (visiting academic) பணியாற்ற செந்தில் குமார் பாலு (Senthil Kumar Balu) சிறிது காலம் சென்றிருந்தார். அப்பொழுது ஒரு முறை கையில் தான் செய்த ஓர் சாக்லெட் அணிச்சலுடன் (கேக் – cake) செந்தில் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றார். அவர் அணிச்சல் செய்ய முயற்சித்தது இதுவே முதல் முறையாகும். கலந்துணவு விருந்துக்காக மேசையின் […]

நினைவுகளைப் பிணைக்கும் பிசின் கலை

“புதுசா கல்யாணம் ஆன ஜோடி ஒன்னு அவங்க கல்யாண மாலை-ல இருந்த பூக்கள அனுப்பி, அவங்க நினைவுப் பெட்டில அதையும் சேர்க்க சொன்னாங்க!” என பூரிப்புப் பொங்கக் கூறுகிறார் அம்ருதா கிரிராஜ் (Amrita Giriraj). அலன்காரா (Alankaara) நிறுவனத்தின் தயாரிப்புகளை செதுக்குவது வாடிக்கையாளர்களின் தனித்துவமான வாழ்க்கைக் கதைகளே. அணிகலன்கள் மற்றும் வாழ்முறை பொருட்களைத் தயாரிக்கும் அலன்காரா, பிசின் கலையின் மூலம் நினைவுகளைப் பொக்கிஷமாக்கி காலச்சுவடுகளை பத்திரப்படுத்தும் செயலில் முனைப்பாக ஈடுபட்டு வருகிறது. தனது பதினைந்து வயதில், விலங்கியல் […]

சென்னையின் குற்றவியல் நிபுணரின் கதை

ரசன்னா தனது பெற்றோர்களுடன் புத்தகக் கடைக்கு வாரந்தோறும் செல்வதுண்டு. அப்படியொரு சமயம் அவர் புத்தகக் கடைக்கு சென்றார். ஃபெமினா, நேஷனல் ஜியோகிராபிக் மற்றும் இந்தியா டுடே போன்ற பிரபல இதழ்கள் வைக்கப்பட்டிருந்த அடுக்குகளைக் கடந்து அவர் ஓடினார். கடையின் பின்புறத்தில் குழந்தைகளுக்கான இதழ்கள் இருந்த பிரிவில் தேடித் துருவி டிடக்டிவ் (Detective) இதழின் சமீப பதிப்பை எடுத்தார். “நான் சிறுமியாக இருந்த பொழுது குற்றவியல் மற்றும் கொலைக் கதைகள் (crime and murder stories) படிப்பதை பெரிதும் […]

தமிழ்நாட்டின் கிராமப்புற ஆங்கில வழிக் கல்வி அங்கன்வாடிகள்

“ஆசிரியர்களுக்கு மின்சார வண்டிகள் தருகின்ற பள்ளிக்கூடம் என்றே அனைவரும் எங்களை குறிப்பிடுவதுண்டு!” என சிரித்துக் கொண்டே நம்முடன் உரையாடத் துவங்குகிறார் அமீகா அகாடமியின் (Amyga Academy) நிறுவனர் லக்ஷ்மி ராமமூர்த்தி (Lakshmi Ramamurthy). இந்தியா எங்கிலும் இருக்கும் குக்கிராமங்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை எடுத்து செல்வதோடு அங்குள்ள அங்கன்வாடிகள் எனப்படும் பள்ளிக்கூடங்கள் இயங்குவதற்கு பங்களித்து வரும் கிராமப்புற மகளிரை தற்சார்பாக மாற்றியும் வருகிறது இந்த பயிற்சி நிறுவனம். பெங்களூரில் பட்டயக் கணக்கர் (Chartered Accountant) ஆக […]

அனைவரும் நகர்ந்து செயல்படுவதற்கான ஓர் கனவு

“பெரியவனா ஆன அப்புறம் நீ என்ன ஆகணும்னு ஆசை படற நைத்ரோ?” என தன்னைக் காண வந்த மற்ற பெரியவர்களைப் போலவே இன்னொருவரும் சிறுவனாகிய நைத்ரோவனிடம் (Naidhrovan) கேட்க அதற்கு அந்த சிறுவனோ “நிலம் நீர் ரெண்டிலையும் போற மாதிரியான பறக்குற கார் ஒன்னு செய்யணும்!” என கண்களில் வியப்பு கலந்த பூரிப்புடன் கூறுகிறான். மற்ற அனைத்து குழந்தைகளும் மருத்துவர்களாகவும் விண்வெளி வீரர்களாகவும் ஆசைப் பட்டு கொண்டிருக்கும் வேளையில் நைத்ரோவனுக்கு கண்டுபிடிப்புகள் மீதே அதீத ஆர்வம் இருந்து […]

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் நிலயான்

சாலையின் நடுவில் ஓர் பசு மாடு நின்றுக் கொண்டு இருந்தது. நகர சூழலுக்கு முற்றிலும் ஒத்துப் போகாத வகையில்  மேய்ந்துக் கொண்டிருக்கும் பல மாடுகளைப் போல இது இல்லை. இது ஏதோ சிரமத்தில் இருப்பது போல தெரிந்தது. அந்த மாட்டிற்கு இருக்கும் பிரச்சனையை சற்று கூர்ந்து கவனிக்க தீபேஷ் பாஸ்கர் (Deepesh Bhaskar) தான் அமர்ந்து இருந்த வாடகைச் சீருந்தினை (cab) நிறுத்தச் சொல்லி அதன் ஓட்டுநரை கேட்டுக் கொண்டார். வண்டிகள் அங்கும் இங்கும் அந்த மாட்டினை சுற்றி […]

உள்ளூர் சுவைகளில் சாக்லெட்கள் தயாரிக்கும் சென்னையின் சாக்லெட் தயாரிப்பாளர்

“சக்கர பொங்கல், மிஷ்டி டோய் (வங்காள நாட்டு இனிப்பு வகை), பாண் மற்றும் பஞ்சாமிர்தம்,” எனப் பட்டியலிடுகிறார் ஜனனி கண்ணன். இவை இந்தியா எங்கிலும் இருக்கும் புகழ்பெற்ற சுவைமிக்க உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் ஸிட்டர் (Zitter) நிறுவனத்தின் சாக்லெட் தொகுப்புகளில் அதிகம் விற்பனையாகும் சாக்லெட்களும் கூட. பதினாறு டிகிரி வெப்பநிலையில் அடுக்குகளாக சாக்லெட்கள் மற்றும் மாவு பண்டங்கள் கொண்ட குளிர் பதனி ஒன்று குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கிறது. இதுவே ஸிட்டர் சாக்லெட் தயாரிக்கும் நிறுவனத்தின் பணியகம் ஆகும். […]

சென்னையின் கால்பந்து வீரர்களின் வானுயர் கனவுகள்

2018-ஆம் ஆண்டு. ஓர் சனிக்கிழமை மாலை. மான்செஸ்டர் உனைடெட் அணிக்கும் ஆர்சீனல் அணிக்கும் இடையேயான போட்டி திரையிடப்படுகிறது. கூட்டத்தினர் கூச்சல் எழுப்புகின்றனர். அறையில் இருந்து உற்சாக கூக்குரல்கள் கேட்கின்றன. கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. “பகுதி நேர வேலையாம்!” என அவர்கள் கூச்சல்களுக்கு மத்தியில் கத்த ஆர்சீனல் அணி அடுத்த கோல் போடுகின்றனர். பெர்னாட் தாம்சன் (Bernaud Thomson) மற்றும் ஹாரி எனப்படும் ஹாரிசன் ஜேம்ஸ் நெல்சன் (Harrison James Nelson) ஆகிய இருவரும் பள்ளிப்பருவத்திலிருந்தே […]

நினைவுகளை எழுப்பும் சிலைகள்

பள்ளிக்கரணையில் ஆங்காங்கே படர்ந்து இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நடுவே உள்ளது பழமை சாயல் கொண்ட ஓர் கலைக்கூடம். பழமையான பொருட்களாலும், அரிய புத்தகங்களாலும், அரசியல் மற்றும் வரலாற்று தலைவர்களின் ஒளிரும் சிலைகளாலும் நிறைந்த “சிலை” (Silaii) என்ற பெயர் கொண்ட சிலைகள் செய்யும் கலைக்கூடம் இதுவாகும். இங்கே பத்து அங்குலம் உயரம் கொண்ட சிலையையும் நீங்கள் காணலாம். தோல் உயரத்திற்கு மேல் இருக்கும் ஏழு அடி உயர சிலையையும் காணலாம். “சிலை என்ற பெயரின் அழகே அதன் […]

இந்தியாவில் வளர்ந்து வரும் மின்வாகனத் துறையில் தடம் பதிக்க வரும் ராப்டீ நிறுவனம்

“இந்தியாவில் மின்வாகனத் துறையில் கடந்த பத்து ஆண்டுகளில் இரு நிறுவனங்கள் கொடி கட்டிப் பறந்து வருகின்றன. எனினும் இந்தியாவில் மின்வாகனத் துறையின் சந்தை என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது,” என விளக்குகிறார் ராப்டீ எனர்ஜி (Raptee Energy) நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியான தினேஷ் அர்ஜுன். அத்துடன் “ஏன் போக்குவரத்தில் எந்த வித மாற்றமும் இதுவரை நிகழவில்லை?” என்ற முக்கியமான கேள்வியையும் நம் முன் வைக்கிறார். அதிவேகமாக வளர்ந்து வரும் மின்சார இரு சக்கர வாகனத் […]

தமிழின் பெருமை சொல்லும் அங்கி நிறுவனம்

கவேந்தர் பாலசுப்ரமணியம் எனும் ராகவ் சென்னையின் பரப்பரப்பான தி.நகரில் தனது இளம் பருவத்தை கழித்தார். தமிழ்நாட்டின் பழம்பெரும் ஆடை மற்றும் நகை கடைகளின் சங்கமமான தி.நகரில் அங்கும் இங்கும் செல்லும் வாகனங்களும் மக்கள் கூட்டமும் அப்பகுதிக்கு வாடிக்கையாக சென்று வருபவர்களுக்கு பரிச்சயமான ஒன்றே. பல்லடுக்கு உயர இந்த கடைகளின் வாசல்களிலும் நடைபாதைகளிலும் சிறு கடை வியாபாரிகள் மும்முரமாக வியாபாரம் செய்து கொண்டிருப்பர். இது மாதிரியான சுற்றுச்சூழலில் வளர்ந்த ஒருவருக்கு  ஆடையலங்காரத் துறையில் ஆர்வம் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று […]

இயல்பான உரையாடல்கள் மூலம் விநியோகச் சங்கிலியில் நிகழ்ந்த மாற்றங்கள்

சன்னிபீ என துவங்கி பின்னர் தொழிலகங்களுக்கு இடையேயான வணிகத்தில் தடம் பதித்து வரும் வே கூல் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பயணம் கார்த்திக் ஜெயராமன் (Karthik Jayaraman), சஞ்சய் தசாரி (Sanjay Dasari) மற்றும் கார்த்திக் உடன் தானியங்கி நிறுவனத்தில் வேலை செய்யும் சக ஊழியர்கள் சிலர் வார இறுதிகளில் கோயம்பேடு சந்தை அல்லது பாரிமுனையின் தானிய சந்தைப் போன்ற இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். சில மாதங்கள் செலவு செய்து அந்த சந்தைகளின் விநியோகச் சங்கிலியை (supply […]

உணவு வீணாவதை குறைப்பதற்கான ஓர் வளங்குன்றா தீர்வு

உலகத்திலேயே பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் போக்குவரத்து செய்யப்படும் போது, உற்பத்தியில் நாற்பது சதவீதம் வீணாக நேர்கிறது. “செயல்முறைல கோளாறு இருக்க மாதிரி தெரில. ஆனா அதற்காக இருக்க கட்டமைப்புல இருந்து தான் பிரச்சனை உருவாகுற மாதிரி இருந்துச்சு,” என சுட்டிக் காட்டும் தீபக் ராஜ்மோகன் (Deepak Rajmohan), எவ்வாறு கிரீன்பாட் லேப்ஸ் (GreenPod Labs) எனும் தன் துளிர் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் […]

துணியாலான கலைநயமிக்க குறிப்பேடுகள்

மஸ் மெர்டன் (Thomas Merton) எனும் அமெரிக்க டிராப்பிஸ்ட்  துறவியின் (Trappist – கிறித்துவ மதத்தின் கதோலிக பிரிவின் ஓர் ஒழுங்குமுறை) புகழ்மிக்க வாசகம் இது – “கலை என்பது நம்மை அடையாளம் காண்பதற்கும் அதே நேரம் நம்மையே நாம் தொலைத்து விடுவதற்கும் வித்தாக இருக்கும்.” இவ்வாசகம், தற்செயலாக கலை ஆர்வலர் ஆனவரும், துணியாலான குறிப்பேடுகளை (journal notebook) கையால் செய்யும் சிட்டா ஹேன்ட்மேட் (Citta Handmade) நிறுவனத்தின் நிறுவனருமான நிரஞ்சனா கிருஷ்ணகுமாருக்கு (Niranjana Krishnakumar) சீராக […]

வாசிப்பை மீட்டெடுக்க மீண்டெழுந்து வரும் வரைகதைப் புத்தகங்கள்

ரோனா பெருந்தொற்று காலம். எங்கும் பொது முடக்கம். பள்ளிகள் இணையத்தில் இயங்கத் துவங்குகின்றன. பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித்ததிற்கான (STEM –science, technology, engineering and mathematics) ஒருங்கிணைந்த ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் சென்னையில் வசிக்கும் இரண்டு பொறியாளர்கள், வீடுகளில் முடங்கிப் போக அதன் பின்னர் நடந்தது என்ன? வாருங்கள் மேலும் வாசிக்கலாம். தங்கள் துளிர் நிறுவனத்தின் அங்கமாக பள்ளிக் குழந்தைகளுக்குக் குறியீடிடல் (coding) கற்பித்து வந்த அபிஷேக் RK (Abishek RK)  நந்தினி […]

மின்சார வாகனத் துறையில் அசத்தும் சென்னையின் சகோதரர்கள்

றந்தது தில்லியில, உற்பத்தியானது (வளர்ந்தது) சென்னைல (எனப் பெருமையாக தங்களைத் தாங்களே இவ்வாறு அறிமுகம் செய்யும்)—ஹர்திக் மற்றும் கௌதம் நருளா (Hardik and Gautam Narula), பெரும்பாலும் தங்கள் சட்டைக்கைகளை சுருட்டிவிட்டுக் கொண்டு இயந்திரங்களில் மறைவாக இருக்கும் இயந்திரப் பாகங்களை அகற்றுவது அல்லது ஓர் மேசையின் மேலே பரப்பிக் கிடக்கும் பலதரப்பட்ட மின் பொருட்களில் இருந்து உருவப்பட்ட, பழைய மற்றும் புதிய வன்பொருட்களின் (hardware) குவியலைக் கொண்டு ஏதோ செய்வது போன்ற ஒரு சிலரே ஈடுபடும் (esoteric) […]

கட்டடக்கலையை அனைவருக்குமானதாக்கும் பயணத்தில் இணைந்த முகம் தெரியாத நபர்கள் – முளைத்த மாவிலை குழு

கட்டடக்கலை மற்றும் கட்டடப் பொறியியல் துறைகளைப் பின்புலமாய் கொண்ட தமிழகத்தைச் சார்ந்த முன் பின் தெரியாத ஒன்பது இளைஞர்கள் அத்துறைகளை உள்ளூர் மக்களுக்கு சென்று சேர்க்க வேண்டுமென கொரோனா பெருந்தொற்றின் பொது முடக்கத்தின் போது ஒரு கூட்டுமுயற்சியில் இறங்கினர். “முன்னேற்றம் என்பது உள்ளூர் பகுதிகளையும், மக்களையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற எங்கள் அனைவரின் கூட்டு நம்பிக்கையில் இருந்தே மாவிலை/MAAVILAI (முன்பு அகழி/Agazhi என்றப் பெயர் கொண்டு இருந்தது – பெயர் மாற்றத்திற்கான காரணத்தை சிறிது […]

கைத்தறி சுற்றுச்சூழலை நூற்கும் நூற்பு நிறுவனம்

ஈரோடு பகுதியின் புறநகரில், நெசவு நகரம் (weaving town) என பெயர்பெற்ற சென்னிமலை (Chennimalai) எனும் குக்கிராமத்தில், நெசவு இயந்திர சத்தத்தின் மத்தியில் C. சிவகுருநாதன் (C. Sivagurunathan) எனும் நெசவாளர் காதி ஆடை அணிந்து மற்ற நெசவாளர்களுடன் கைத்தறி வேலையில் ஈடுபட்டு உள்ளார். தலைமுறை தலைமுறையாக இங்கு நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்கள், உலகமயமாக்கலால் எண்ணிக்கையில் பெருவாரியாக குறைந்து உள்ளனர். நெசவுத் தொழிலை குடும்பத் தொழிலாகக் கொண்ட குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவர் சிவகுருநாதன். மில்லீனியல்ஸ் […]

மேம்பட்ட வாய்ப்புகளை நோக்கி குத்துச்சண்டையிட்டு செல்லும் குத்துச்சண்டை வீரர்கள்

கூவம் நதிக்கரையில் தார்ப்பாய், குப்பைக் கூளம், நெருக்கடியான குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கிறது சிறிய சுற்றுச் சுவரால் சூழப்பட்ட300சதுர அடி அளவிலான அரசு பொழுதுபோக்கு மையம். சுவருக்கு மறுபுறத்தில் இருந்துமெல்லமான பெருமூச்சு விடும் சத்தங்களும், கால்களை தேய்க்கும் சத்தங்களும், தூரத்தில் எவரோ எண்களை எண்ணும் சத்தமும் வருகிறது. மங்கிப் போன நீல நிறக் கதவுகள் திறக்கின்றன. கதவுகளுக்கு மறுபுறம், குத்துச் சண்டை வளையத்தை வரையறுக்கும் விதமாக இருக்கும் ஒரு செவ்வக வடிவ களத்தில், ஏழு வயதே ஆன சிறுவர் […]

அண்ணன் – தங்கை இணைந்து உருவாக்கும் இதமான, வளங்குன்றா ஆடைகள்

ஒரு மதிய வேளையில் அருண் குமார் (Arun Kumar) என்பவரும் அவரின் தங்கை SP பொன்மணியும் (SP Ponmani) மதுரையில் சிறுவயதில் அவர்கள் வாழ்ந்து வளர்ந்த வீட்டை சுத்தம் செய்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது ஒரு பெட்டகத்தை அங்கு கண்டனர். அந்த பெட்டகமானது, அவர்கள் சிறுவயதில் அணிந்து இருந்த முற்றிலும் பருத்தியால் ஆன ஆடைகளால் நிரம்பி இருந்தது. “அந்த துணியானது மிகவும் மென்மையாகவும், 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் பயன்படுத்தக் கூடிய வகையில் இருந்தது,” என தங்கள் […]

அண்ணன் – தங்கை இணைந்து உருவாக்கும் இதமான, வளங்குன்றா ஆடைகள்

ஒரு மதிய வேளையில் அருண் குமார் (Arun Kumar) என்பவரும் அவரின் தங்கை SP பொன்மணியும் (SP Ponmani) மதுரையில் சிறுவயதில் அவர்கள் வாழ்ந்து வளர்ந்த வீட்டை சுத்தம் செய்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது ஒரு பெட்டகத்தை அங்கு கண்டனர். அந்த பெட்டகமானது, அவர்கள் சிறுவயதில் அணிந்து இருந்த முற்றிலும் பருத்தியால் ஆன ஆடைகளால் நிரம்பி இருந்தது. “அந்த துணியானது மிகவும் மென்மையாகவும், 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் பயன்படுத்தக் கூடிய வகையில் இருந்தது,” என தங்கள் […]

குப்பையைப் பயனுள்ளதாக்கும் சென்னை துளிர் நிறுவனம்

உயர்நிலைப் பள்ளியில் வேதியியல் (chemistry) பாடத்தில் வரும் சமன்பாடுகளையும் குறியீடுகளையும் (equations and symbols) எவ்வாறு மனதில் நிறுத்துவது என அவற்றைக் கண்டு பலரும் அஞ்சுவதுண்டு. ஆனால் கேஷவ் விஜய் (Keshav Vijay) என்பவருக்கு அதுவே கை வந்த கலையாக இருந்தது. வேதியியல் துறையிலேயே தான் பணி செய்ய வேண்டும் என்பதை வெகு முன்பாகவே அவர் உணர்ந்தார். தனது பத்தாம் வகுப்பில் எல்லாம் தான் ஒரு வேதிப் பொறியாளர் (Chemical Engineer) ஆக வேண்டும் என்பதை முடிவு […]

அரிய இசைக் கருவிகளை உயிர்ப்பிக்கும் உரு நிறுவனம்

சங்கக் காலத்தின் மறந்துப் போன இசைக்கருவியான யாழை, சென்ற ஆண்டு புதுபிக்கப்பட்ட நிலையில் உயிர்பித்து அதற்கு உரு கொடுத்தவரே, இளம் இசைக் கலைஞரும் நரம்பு இசைக் கருவிகள் செய்வதில் கைத்தேர்ந்தவருமான தருண் சேகர் (Tharun Sekar) என்பவர். மயில் வடிவத்தில் தலைப் பகுதி. அதிலிருந்து இசைவாக வளைந்து செல்லும் மென்மையான கழுத்துப் பகுதி. இரண்டு சிறிய இறக்கைகளால் சூழப்பட்டு இருக்கும் மரத்தால் ஆன கிண்ணம் வடிவில் பரந்து விரிந்த ஒரு அடிப்பகுதி. அதன் மேலே ஒலிப்பலகையாக செயல்படுவதற்கென […]

அறைகலன் பின்னல் கலையில் பின்னி எடுக்கும் இருக்கை துளிர் நிறுவனம்

தமிழ்நாட்டின் தென்முனையை அடுத்துள்ள ஓர் கடற்கரை நகரமான நாகர்கோவிலைச் சார்ந்த இளைஞரே சந்தோஷ் குமார். நாகர்கோவிலை பூர்விகமாக கொண்ட இவர் குடும்பத்தில், இவர் தந்தை பிரம்பு  (cane) மற்றும் நெகிழ் கம்பியால் (wire) அறைகலன் பின்னும் கைவினைக் கலையை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார். தன் இளம் பருவம் முழுவதும் தன் தந்தை அறைகலன் செய்வதை பார்த்து வளர்ந்த சந்தோஷுக்கு தன் பன்னிராண்டாம் வகுப்பில், “ஏன் நான் இந்தக் கலையை அப்பாவிடம் இருந்து கற்றுக் கொள்ளக் கூடாது?” என […]

பெண்களை சுதந்திரப் பறவைகளாக உலா வர வைக்கும் இன்டிபெண் (indePenn) நிறுவனம்

“இந்தியாவில் கல்விப் பயின்ற எல்லாப் பெண்களும் வேலைக்குச் சென்றால் நம் உள்நாட்டு உற்பத்தியானது (GDP – Gross Domestic Product) குறைந்தளவு 25% உயரும்!” என்று சமீபத்தில் தான் கண்ட அறிக்கையிலிருந்து ஒரு புள்ளிவிவரத்தை நினைவுக் கூறுகிறார் ராணி. “ஒரு சில மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் உயர்கல்வி சேரும் பெண்களின் சதவீதம் அதிகபட்சமாகவே உள்ளது. மேல்நிலைக் கல்வியில் சேரும் மாணவர்களுள் கிட்டத்தட்ட 50% பேர் பெண்களாகவே உள்ளனர்,” என குறிப்பிடுகிறார் ரஜனி. அப்படியானால் ஏன் இது நம் […]

சுவையில் சிறந்த அடுக்குகள் சொல்லும் மனதில் பதியும் கதைகள்

றிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு முந்தைய மாலை பொதிகை தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக மறைந்த பிரபல தமிழ் பேச்சாளர் மற்றும் எழுத்தாளருமான வலம்புரி ஜான் (Valampuri John) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தார். அது ஒரு அடுதல் (Baking) நிகழ்ச்சியாகும். “கேக் (Cake) என்பதை எதனால் கேக் என்று அழைக்கிறோம் தெரியுமா? ஏனென்றால் அது அவ்வளவு சுவையாக இருப்பதால் அனைவரும் அதனை திரும்பி திரும்பி ‘கேக்’கணும் (Cake’kanum) என்பதற்காகத் தான்” என நகைச்சுவையாகக் கூறினார். அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் வாய்விட்டு […]

நகர்சாரா தொழில்களின் முன்னேற்றத்திற்கான நான்கு படிமுறைகள் செயல்திட்டம்

2020-இல் கொரோனா பெருந்தொற்றின் முதலாவது அலையின் போது ஒரு ஆராய்ச்சி திட்டத்துக்காக ரஷ்யாவிற்கு சென்றார் தேன் (Thein). ஆனால், விதியின் விளையாட்டால் அவர் அங்கு சென்ற நேரம் பார்த்து நாடு முழுவதும் பெருந்தொற்றினால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. ஒரு சிறிய சமையல் இடம் கொண்ட சிறிய அறையில் சிக்கிக் கொண்டார் அவர். முடிவிலா மௌனத்தையும், நாட்களையும் கடக்க அவரின் மடிக்கணினி மட்டுமே அவரிடம் இருந்தது. அவருக்கு அந்த நாட்டின் மொழியும் தெரியாது; அங்கு வசித்த வந்த எந்த […]

உடை சொல்லும் கதை

டை அலங்காரத் துறையின் முன்னோடி அடையாளங்களில் ஒருவரான ஐரிஸ் ஆப்ஃபெல் (Iris Apfel) முன்னொரு முறை, “என் ஆடை அலங்கார பாணியே (style) உங்களின் ஆடை அலங்கார பாணியாக இருக்க வேண்டும் என்பதில்லை. மேலும் ஆடை அலங்கார பாணி என்பது வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில்லை. பாணி என்பது ஒருவர் யார் என்பதை அவருக்கென இருக்கும் தனித்துவ வழியில் வெளிப்படுத்துவதே ஆகும்” எனக் கூறினார். மக்கள் அவரவர்களின் உடல்களை அரவணைக்கக் கற்றுக் கொள்ளும் முயற்சியில் ஒரு புறம் […]

கோலி சோடா நிறுவனம் இயக்கும் ஒரு வளங்குன்றா வாழ்க்கை

யிலாப்பூரில் வளர்ந்த வந்த ஆறு வயதான ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன் (Sruti Harihara Subramanian) என்பவருக்கு, விலங்குகள் மீதும், திறந்தவெளிகள் மீதும் ஒரு தனிப்பட்ட பிரியம் இருந்தது. தன் விடுமுறை நாட்களில் பச்சை பசேல் என்று இருக்கும் கேரளாவின் பசுமை நிலவெளிகளின் மத்தியில், ஒரு சிறிய நகரத்தில் வசித்து வந்த தனது தாத்தா பாட்டி வீட்டுக்கு அவர் செல்வது வழக்கம். அந்த மந்தமான சிறிய நகரில் அவருக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு செயல் என்னவென்றால், அங்கு இருக்கும் […]

வாழ்வின் படைப்பாற்றல் கலையான உளச்சிகிச்சை

க்களின் மனங்களில் சுற்றி வந்த உளச்சிகிச்சை (therapy) குறித்த ஒரு களங்கம் (stigma) மெதுவாக விலகத் தொடங்கி வருகிறது. பெpருந்தொற்று ஆரம்பித்த நாட்களில் இருந்தே இளம்வயதினர், மனநலத்தில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். எனினும் சென்னையில் வெறும் 21 உளச்சிகிச்சை மையங்களே இருக்கின்றன. ஒட்டுமொத்த 138 கோடி இந்திய மக்கள் தொகைக்கும் வெறும் 5000 மையங்களே இந்தியா முழுவதும் இருக்கின்றன. இந்த மையங்களில் ஒன்றான நிகிதா ரைசிங்கனி (Nikita Raisinghani) என்பவரால் நடத்தப்படும் ஹொரைசன் உளச்சிகிச்சை […]

தொண்டு ஆற்றும் குன்னூரின் வினோத உணவகம்

தமான குளிர் கொண்ட அமைதியான குன்னூர் மலைச் சரிவுகளில் — ராதிகா சாஸ்திரி என்பவரின் கொல்லைப்புறத்தில் — சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளை தன்வசம் ஈர்த்தவாறு, கதகதப்பான பழைய பாணியில் இருக்கும் செங்கல் சுவர்களுடன், வரவேற்கும் மஞ்சள் நிற விளக்குகளையும் மிக அழகான உட்புற கலைப் பொருட்களையும் கொண்டு இயங்கி வருகிறது – நம் கதையின் கருவான கஃபே டீயம் (Cafe Diem) எனும் உணவகம். “மலைபிரதேசத்தில் தான் வசிப்பேன் என்பதை நான் எப்பொழுதும் நன்கு அறிவேன்,” […]

மீமானிடர் (Superhuman) ஆவது எப்படி?

க்கி சானின் தீவிர பின்பற்றாளர் ஆன பதினாறு வயது விஷால் குமார் (Vishal Kumar) மணிக்கணக்கில் ஜாக்கி சானின் இசைவான நகர்வுகளை வலையொளியில் (Youtube) கண்டு அவற்றை பகுத்தாய்ந்து வந்தார். அவ்வாறு காண்கையில், வலையொளியின் பரிந்துரைக்கப்படும் காணொளிகள் (Videos) பகுதியில் தாண்டோட்டம் (பார்க்கூர் – Parkour) பற்றிய காணொளி ஒன்றை அவர் தற்செயலாக கண்டார். “நான் தீவிரமாக செய்து வரும் ஒரு செயலுக்கு உண்மையிலேயே ஒரு பெயர் இருப்பது எனக்கு அப்பொழுது தான் தெரிந்தது!” என நினைவு […]

பன்னாட்டு பயனர் கொண்ட உள்ளூர் அணியங்கள்

ன்னிந்தியர்கள் பெரும்பாலும் அவர்களின் பிறந்த ஊரின் பெயரைத் தங்களின்  புனைபெயராக வைத்துக் கொள்வது வழக்கம். ஸ்ரீரங் (Srirang) என்றழைக்கப்படும் ஸ்ரீத்தி சடகோபன் (Srithi Sadagopan), தன் திருமணம் வரை தன் இளம்பருவத்தை திருச்சியில் உள்ள கோயில் நகரான ஸ்ரீரங்கத்திலேயே (Srirangam) கழித்தார். தன் வாழ்க்கையை மொத்தமாக திருப்பிப் போடப் போகும் ஒரு வாழ்க்கை கட்டத்திற்குள், கனிவான இருபத்து மூன்று வயது சிறு ஊரில் வளர்ந்த பெண்ணான ஸ்ரீத்தி சடகோபன் நுழையப் போகிறார் என அவர் அறிந்திருக்கவில்லை. உலகின் […]

வாயுஜல் (VayuJal): காற்றிலிருந்து குடிநீர்

ம் சந்திக்க போகும் குடிநீர் நெருக்கடிக்கு (water crisis) தொடர்ச்சியாக வளர்ந்து வரும்  இந்த உருவாக்கம் ஒரு தீர்வாக இருக்கலாம். ரமேஷ் குமார் மனித நலன் (humanitarian) சார்ந்த இந்த சவாலுக்கு விடை காண எவ்வாறு முயல்கிறார் என்பதை பார்ப்போம். “நான் தான் குடும்பத்தில் முதல் பொறியாளர் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தின் (Indian Institute of Technology – IIT)  முதல் பட்டதாரியும் கூட. என் அப்பா ஒரு விவசாயி மற்றும் நகைக் கடை […]

ஜென் ஸீ (GenZ) பயிற்சி: மாணவர்களுக்காக மாணவர்களால்

அடுத்த தலைமுறை மாணவர்களுக்கான சிறந்த பயிற்சியாளர்களை கண்டறிய உதவும் சிறந்த தளம் ஒன்றை இரண்டு கட்டடக்கலை (Architecture) பட்டதாரிகள் தோற்றுவிப்பர் என்று எவரும் யூகித்து இருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளை கற்க வைப்பதற்கான ரகசியத்தை ரோஹித் ரஹேஜா (Rohit Raheja ) மற்றும் சச்சித் துகர் (Sachit Dugar) ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளனர். மென்டார் மேட்ச் (Mentor Match) எனப்படும் அவர்களின் கல்விதொழில்நுட்ப (Edtech) இணையத்தளத்தின் வழியாக இக்குழு, இந்தியா முழுவதிலும் உள்ள மூன்றாம் வகுப்பில் […]

கண்ணாடி கலையில் கலக்கும் ராதிகா

நம்மில் பெரும்பாலானோர் கண்ணாடியை, எளிதில் உடையக்கூடியதாகவும், அச்சுறுத்தும் ஒரு பொருளாகவுமே எண்ணுவோம். ஆனால் கோலி சோடா கண்ணாடி கலைக்கூடத்தின் (Goli Soda Glass Studio) நிறுவனரான ராதிகா க்ரிஷ் (Radhika Krish) என்பவர் தன் அழகான கண்ணாடிக் கலையால் நம்முடைய அந்த எண்ணத்தை விரிசலடைய செய்கிறார். “ எனது சிறுப்பருவத்தில் நான் கண்ட “கோலி சோடா” புட்டிகள் (bottles) என் ஆவலைத் தூண்டுவதாக இருந்திருக்கின்றன. புட்டியிலிருந்து கோலியை வெளியில் எடுக்க நான் மணிக்கணக்கில் நேரம் செலவிட்டுள்ளேன்,” என […]

வாழ்க்கையின் விளையாட்டு: கோயம்புத்தூரின் பொம்மை வடிவமைப்பாளர்

பொம்மை வடிவமைப்புத் துறையில் கனகா ஆனந்த் அவர்களின் நியதி நம்மை அவரின் குழந்தைப்பருவக் காலத்துக்கு இட்டுச் செல்கிறது. இவர் இன்று மணியம்ஸ் (Maniams) என்றொரு தனித்துவமான வடிவமைப்பு நிறுவனம் வடிவம்பெற, தனக்கும் தன் மறைந்த சகோதரர் கார்த்திக் ஆனந்திற்கும் உதவியாக இருந்த சிறு சிறு நுணுக்கங்களை ஒருங்கிணைத்து தன் வாழ்க்கை சம்பவங்களை அழகாக நம் முன் விவரிக்கிறார். சிறு வயதிலிருந்து கனகாவை அறிந்தவர்கள் அவர் படைபாக்கத் தொழிற்துறையில் (Creative Industry) தடம் பதிப்பார் என்று கண்டறிந்தனர். மும்பையில் […]