THE PORTAL INTO ENTREPRENEURSHIP IN TAMIL NADU

வாயுஜல் (VayuJal): காற்றிலிருந்து குடிநீர்

ம் சந்திக்க போகும் குடிநீர் நெருக்கடிக்கு (water crisis) தொடர்ச்சியாக வளர்ந்து வரும்  இந்த உருவாக்கம் ஒரு தீர்வாக இருக்கலாம். ரமேஷ் குமார் மனித நலன் (humanitarian) சார்ந்த இந்த சவாலுக்கு விடை காண எவ்வாறு முயல்கிறார் என்பதை பார்ப்போம்.

“நான் தான் குடும்பத்தில் முதல் பொறியாளர் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தின் (Indian Institute of Technology – IIT)  முதல் பட்டதாரியும் கூட. என் அப்பா ஒரு விவசாயி மற்றும் நகைக் கடை வியாபாரி. வற்றாத குடிநீர் பிரச்சனை ஆண்டுதோறும் இருக்கும் ராஜஸ்தானில் (Rajasthan) உள்ள ஒரு சிறிய கிராமம் தான் எங்களின் சொந்த ஊர்” என கனிவான குரலுடன் ரமேஷ் குமார் சோனி, தயக்கத்துடன் தன் பின்புலத்தை விவரிக்கிறார்.

2010 இல் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர சரியான பொறியியல் பாடப்பிரிவை அவர் தேடிக் கொண்டு இருக்கையில், அவரின் நண்பர்களும், ஆலோசகர்களும் நேனோ தொழில்நுட்பவியல் (nanotechnology) பாடப்பிரிவை அவருக்கு பரிந்துரைத்தனர். அவரின் இந்த தேடல,  சென்னையின் புறநகரில் உள்ள எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில்  (SRM Engineering College) வந்து முடிய அங்கேயே தனது நான்கு ஆண்டுக் கால இளங்கலை படிப்பையும் முடித்தார்.

கல்லூரிப் பருவத்துக்கு பின்னர், இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science – IISc), சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT Chennai) மற்றும் மற்ற இடங்களில் ஆராய்ச்சி சார்ந்த திட்டப் பணிகளில் பணிபுரிந்தார். எனினும் இந்த உள்ளுறை பயிற்சிகள் (internships) திடமான விளைவுகள் ஏதும் தராமலும், குறைந்த நாட்களே நீடிப்பதாகவுமே இருந்தன. “ஒரு சில திட்டப்பணிகள்  எல்லாம் வெறும் அறுபது நாட்கள் காலவரையறை (time frame) கொண்டு இருந்தன! அந்த காலவரையறையில் என்ன செய்ய முடியும்?” என நினைவுக் கூறுகிறார் ரமேஷ்.

அதன் பிறகு ஐஐடி சென்னைக்கு (IIT Chennai) சென்ற அவர் அங்குள்ள ஆய்வகங்களில் (las) தானாக முன் வந்து (volunteer) பணிப் புரியத் தொடங்கினார். புறப்பரப்பு பொருட்களின் (surface material) ஆராய்ச்சியில் பேராசிரியர் பிரதீப் குமார் (Pradeep Kumar) உடன் இணைந்து பணியாற்றினார். இதுவே, அங்கு அவருக்கு ஒரு வேலைக் கிடைக்கவும் வாய்ப்பாக அமைந்தது. இது மட்டுமல்லாமல் அவரின் ஆராய்ச்சியை, ஒரு இளங்கலை (graduate) மற்றும் முனைவர் பட்டப்படிப்புடன் ஒருங்கிணைக்கும் வாய்ப்பும் அவருக்கு கிட்டியது.

“வளி மண்டல நீரை திரவமாக்கி கவரல் (atmospheric water condensation capturing) மற்றும் புறப்பரப்பு பொருட்கள் கட்டமைப்பில் (surface material composition)   என்னுடைய முறைசார் பணியை 2017 இல் தொடங்கினேன்” என்று கூறும் நம் இளம் தொழில்முனைவோர் ரமேஷ் “ திரவமாக்கலை (condensation) 15 சதவீதம் (இது ஒரு மிகப் பெரிய அளவு இல்லை எனினும் நம்பிக்கையூட்டும் ஒன்றே) உயர்த்தும் ஒரு தனித்தன்மை வாய்ந்த புறப்பரப்பை (surface) இயற்றுவதே எங்களின் முதல் சிறிய வெற்றிப்படியாக இருந்தது” எனக் கூறுகிறார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவரும் அவரின் சிறிய குழு ஒன்றும் இணைந்து முதல் வளிமண்டல நீர் உருவாக்கியை (Atmospheric Water Generation unit) உருவாக்கினர். “எங்களின் சிந்தனையை ஒரு இயற்பொருள் சார்ந்த  வடிவமைப்பாக (physical design)  வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வழியாக இருந்தது. மேலும் எங்களின் இந்த கண்டுபிடிப்பானது, எப்போதும் தொடர்ந்து வளர்ந்துக் கொண்டே இருக்கும் ஒரு உருபொருள் (entity) என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்,” என்கிறார் அவர்.

ஒரு சோதனைத் திட்டமாக இதனை வழங்க அவரும் அவரின் குழுவும் பெருமைக்குரிய இந்திய பொறியாளர் நிறுமத்தை ( Engineers India Limited ) அணுகினர். ஒரு நாளுக்கு 2000 லிட்டர் வரை நீர் உருவாக்கும் சாதனம் (unit) ஒன்றை உருவாக்க அவர்களுக்கு சன்மானம் (award) கிடைத்தது. ஆனால் மின்சாரம் அல்லாமல் மீள் உருவாக்கம் செய்யக் கூடிய சூரிய ஒளி போன்ற ஆற்றலைப் (renewable energy) பயன்படுத்துமாறு அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறிதும் ஆச்சரியத்துக்கு அன்றி, எரிச்சலூட்டும் பணித்துறைகளும், ஆவணங்களும்  (paperwork) சன்மானத்தை தாமதப்படுத்தவே, வாயுஜல் (VayuJal) சில உள் செய்முறை சிக்கல்களாலும், கொரோனா பெருந்தொற்றாலும் மேலும் பாதிப்புக்குள்ளானது.

இதனால் மனம் தளராத ரமேஷ், ஒரே நாளில் – 30 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 400 லிட்டர் நீர் உருவாக்கும் ஆற்றல் கொண்ட சிறிதளவு சாதனங்களை (units) கட்டமைக்கத் தொடங்கினார். “இவ்வாறு செய்ததன் மூலம் நாங்கள் கட்டமைத்த சாதனத்தின் பொறியியல்  செயல்பாடு நல்ல முறையில் உள்ளது என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. மேலும் நாங்கள் பொருத்திய அமைப்புகள் வடிவளவிலும், தோற்றத்திலும் மாற்றம் செய்யத்தக்கதாகவும் (scalable) திரும்பவும் செய்யத்தக்கதாகவும் (repeatable) இருந்தது,” என அவர் புன்னகைக்கிறார். ஆய்திறனுடைய அம்சமான நுகர்வோர் சேவைக்கும் (customer support and service)  இது அவரை ஆட்படுத்தியது. எந்தவித சவால்களும் அன்றி அவற்றிற்கும் அவர் தீர்வு கண்டார்.

ஐந்து வெவ்வேறு கொள்ளளவு சாதனங்களுடன் வாயுஜல் (VayuJal) பலவகையான தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது – ஒரு நாளுக்கு 30 லிட்டர் (liters per day – LPD) நீர் உருவாக்கும் சாதனமானது ஒரு சிறிய குடும்பம் அல்லது அலுவலகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். “எங்களின் வாடிக்கையாளர்களில் ஒருவர் இந்த நீரினை தினமும் குளிப்பதற்கு பயன்படுத்துகிறார். மேலும் அவரின் தோலுக்கு மிகவும் பயன் தரும் வகையில் நீரின் தரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்,” என ரமேஷ் சிரித்துக்கொண்டே கூறுகிறார். பெரிய கொள்ளளவு சாதனங்கள் (larger units) கல்லூரி விடுதிகள், உணவகங்கள், உணவு விடுதிகள் மற்றும் பெரிய தகவல் தொழில்நுட்ப வளாகங்களின் (IT campuses) தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

உற்பத்தி அளவுகோல் பெரிதாக பெரிதாக அதனுடனே அதன் பொறியியல் செயல்பாட்டின் அளவு, கொள்முதல் தொடர் (supply chain), மக்கள் மற்றும் நிதிகள் (funds) போன்றவற்றில் உள்ள சிக்கல்களும் பெரிதாகின்றன. “நாங்கள் தற்பொழுது ஒரு மாதத்துக்கு நான்கில் இருந்து ஐந்து சாதனங்களை (units) கோரிக்கையின் அடிப்படையில் தயாரித்து வருகிறோம். எனினும் வரும் நாட்களில் ஒரு மாதத்துக்கு இருபதிலிருந்து முப்பது சாதனங்கள் வரை தேவையின் அடிப்படையில் எண்ணிக்கை உயரக் கூடும் என எதிர்ப்பார்க்கிறோம்,” என கூறுகிறார் ரமேஷ். மன உறுதிக் கொண்ட நம் நிறுவனர், தொழிலை தரப்படுத்தவும் (standardize), செலவுகளைக் குறைக்கவும் (economize) இதை ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக கருதுகிறார்.

என்னதான் நீர் உற்பத்தியில் ஈரப்பதம் (humidity) மற்றும் வெப்பநிலையை (temperature) அறிவியல் சார்ந்து இருந்தாலும் கூட கிட்டத்தட்ட எல்லா வெப்பநிலை பகுதிகளிலும் (all ranges) வாயுஜல் (VauJal) குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வல்லது என ரமேஷ் உத்திரவாதம் தருகிறார். “ஆம் நாங்கள் ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் குறைந்தளவே நீர் உற்பத்தி செய்ய முடிந்தாலும் கூட ஒரு நாளின் நீர் உற்பத்தி (water production per day) என்பது குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாகவே உள்ளது. மேலும் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு குடும்பமானது காலங்காலமாக தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுமாறே வரைப்படுத்தபட்டுள்ளது. இந்த பழக்கமானது அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் எங்களுக்கு உதவுகிறது.”

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த சாதனங்களில் (units) உள்ள பொதியுறைகளை (cartridges) மாற்றிட தேவை உள்ளதால் அவ்வாறு மாற்றுகையில், எவ்வாறு தன் சாதனமானது சந்தையில் செயலாற்றுகிறது என்பதை ரமேஷ் ஆய்வுக் கொள்ள முடிகிறது.

எல்லா ஐந்து வகை சாதனங்களுக்கும் தேவை தற்பொழுது அதிகரித்து இருப்பதால் நுகர்வோர் சேவைத் தொகுதிகளைக் (service clusters) கையாள தொலைவிட குழுக்களை  (remote teams)  கட்டமைக்க ரமேஷ் விரைந்து செயல்பட்டு வருகிறார். மேலும் கொள்முதலில் (purchase) இருக்கும் இடர்பாடுகளை குறைக்க மாதத் தவணைகள் (monthly payments) , கடனட்டை ஒப்புக்கொள்ளல் (credit card acceptance) மற்றும் சுயசேவைப் (self-service)  போன்ற அமைப்புகளை தொழில்முறையில் கொண்டு வருகிறார். “2022 இல் நாங்கள் பத்து மடங்கு வளர முற்படுகிறோம். அது ஒரு புல்லரிக்கும் இலக்கு கூட,” என தெரிவிக்கிறார் நம் இளம் முதல் முறை தொழில்முனைவோரான ரமேஷ்.

“விற்பனை மேலோங்கி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே, ஒரே மாதத்தில் நூறு சாதனங்களை (units) தயாரிக்கும் செயலாற்றலை நாங்கள் எளிதில் எட்டி விடுவோம் என நம்புகிறோம்“ என்று கூறுகிறார் அவர்.

தனது நிறுவனம் தற்போதுள்ள நிலையில் மதிப்பிடப்பட வேண்டும் என்று ரமேஷ் குமார் கருதவில்லை. தனது இயக்கங்களை (operations) விரிவாக்க கடன் வசதிகளை அவர் ஆராய்ந்துக் கொண்டிருக்கிறார். “விற்பனை (sales) நிச்சயம் வருவாய் (revenue) ஈட்டும் என்பதில உறுதியாக உள்ளோம். மேலும் ஒரு எளிய கடன் ஒன்றே எங்களை விரைவில் பன்மடங்கு விரிவடைய உதவிடும்.” என விவரிக்கிறார் ரமேஷ் செயல்பாட்டு சிக்கல்களைத் தவிர, ரமேஷ் எதிர்காலத்தை மையமாக கொண்டு செயல்படுகிறார். “கூகுள் (Google) நிறுவனத்தைப் போலவே நாங்களும் எதிர்காலத்தின் ஒரு பகுதியாக விரும்புகிறோம். மின்திறன் பயன்பாடு (power consumption), புறப்பொருள் நூதனம் (surface innovation) , சேவை விநியோகம் (service delivery), ஏன் குடிநீரையே சேவையாக வழங்கல் (water-as-a-service) போன்ற கருத்தாக்கங்களைச் (concepts) சுற்றியே நெளிவுநிரவல் (tinkering) செய்தும் அதற்கான  நுண்-கண்டுபிடிப்புகளை (micro-innovation) உருவாக்கியும் நாங்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறோம்” எனும் அவர், “நாங்கள் இப்பொழுது தான் தொடங்கி உள்ளோம். வரும் காலம்  எங்களை எங்கு இட்டுச் செல்லப் போகிறது என்பதைக் காண உற்சாகமாக உள்ளோம்.” என நிறைவு செய்கிறார்.

Subscribe to our Newsletter!

Want to hear more?

When this story reaches 1000 views we will cover an exclusive of this business.

94/1000 views
Share
How you can support this business.

Connect with this business​

Related Stories

Puvidham School is an alternate school centered around the child’s innate curiosity and the five elements of nature.
Fullfily is building a comprehensive EV-as-a-service platform to build cost-efficient and eco-friendly delivery solutions for small businesses.
Anuhya Reddy went to London as an Architect and returned as a Pastry Chef driving the dessert realm of Chennai.