கூவம் நதிக்கரையில் தார்ப்பாய், குப்பைக் கூளம், நெருக்கடியான குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கிறது சிறிய சுற்றுச் சுவரால் சூழப்பட்ட300சதுர அடி அளவிலான அரசு பொழுதுபோக்கு மையம். சுவருக்கு மறுபுறத்தில் இருந்துமெல்லமான பெருமூச்சு விடும் சத்தங்களும், கால்களை தேய்க்கும் சத்தங்களும், தூரத்தில் எவரோ எண்களை எண்ணும் சத்தமும் வருகிறது. மங்கிப் போன நீல நிறக் கதவுகள் திறக்கின்றன. கதவுகளுக்கு மறுபுறம், குத்துச் சண்டை வளையத்தை வரையறுக்கும் விதமாக இருக்கும் ஒரு செவ்வக வடிவ களத்தில், ஏழு வயதே ஆன சிறுவர் சிறுமியர் உட்பட இளைஞர்கள் பலர் குத்துச்சண்டை அசைவுகளை அவர்களுக்குள் பயிற்சி செய்துக் கொண்டு இருக்கின்றனர்.வலப்புறத்தில், அடுக்கி வைக்கப்பட்ட வட்டைகளால்(tyre) ஆன, தற்காலிக சிவப்பு மற்றும் நீல வண்ண குத்துச்ச்சண்டை பைகள் ஒரு உலோக கம்பத்தில் தொங்கவிடப்பட்டுள்ளன. பின்புறத்தில் கட்டடத்தின் கட்டமைப்பு புலப்பட அதன் கரைப்பட்டச் சுவர்கள், ஒலிம்பிக் வெற்றி நாயகர் முகமது அலி (Muhammad Ali)மற்றும்முனைவர் பி.ரா. அம்பேத்கர்(Dr. B.R. Ambedkar) ஆகிய இலட்சிய மனிதர்களின் உருவப்பட ஓவியங்களாலும், ஆங்கிலத்திலும் தமிழிலும்எழுதப்பட்டுள்ள ஊக்குவிக்கும் மேற்கோள்களாலும் அழகூட்டப்பட்டுள்ளன. இந்த உருவப்பட ஓவியங்களுக்கு மத்தியில், கருநீல உலோக கதவின் மீது‘GSகுத்துச்சண்டைபயிற்சி மையம்’ (GS Boxing Academy)என்ற வார்த்தைகள் எடுப்பான வெண்மை நிற வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. கதவுக்கு மறுபுறம் சகஜமாக பழகும் பயிற்சியாளர் ஆன U. கோவிந்தராஜ்(U. Govindaraj)என்பவரின் நிழல் உருவம் புலப்படுகிறது. மணலால் நிரப்பப்பட்ட கருநிற குத்துச்சண்டை பைகளை ஓங்கி குத்திக் கொண்டு இருக்கும் அக்கம் பக்க குழந்தைகளுக்கு ஊக்குவிக்கும் வார்த்தைகளை சத்தமாக கூறிக் கொண்டு இருந்தார் அவர். பயிற்சியாளர் கோவிந்தராஜின் குடிசை பகுதியில் இருக்கும் குத்துச்சண்டை பயிற்சி மையமே KSகார்த்திகேயன் (KS Kharthickeyen) மற்றும் JL அபிநயாவின் (JL Abinaya)ஃபாக்கபாப்பா நிறுவனம் (Whakapapa Foundation)தோன்றுவதற்கு மேற்கோளாக இருந்தது.
கோவிந்தராஜ் மின்ட் தெருவில் வசித்து வந்தார். அங்கு வசித்து வருகையில் பல விளையாட்டுகளை அவர் பதம் பார்க்க, தனது தந்தை ஈடுபட்டு இருந்த, வடசென்னையில் பிரபலமான விளையாட்டான குத்துச்சண்டை தனக்கு இயல்பாக வருவதை உணர்ந்தார். அதன் மீது இருந்த தீராப் பற்றினால் கோவிந்தராஜ் அதில் தேசிய விளையாட்டு வீரர்ஆனார். “நான் காவல் பயிற்சி நிறுவனத்திலோ அல்லது ரயில்வே துறையிலோ சேர்ந்திருக்கலாம். ஆனால், எனது இளம் பருவத்தில் விளையாட்டுத் தனமாக இருந்ததால் அந்த வாய்ப்புகளை தவறவிட்டு விட்டேன்,” என வருத்தத்துடன் கூறுகிறார் கோவிந்தராஜ். “எனவே, நான் ரயில்வே துறையில், ரயில் வண்டியில் சுமை ஏற்றும் தொழிலாளர் ஆனேன். அந்த வேலை நேரத்தைத் தவிர பிற நேரங்களில் நான் குத்துச்சண்டை பயிற்றுவிப்பதில் ஈடுபடுவதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு நான் இளம்பருவத்தில் தவறவிட்ட வாய்ப்பினை ஏற்படுத்தித் தர முடிகிறது.” தற்போது அங்கு இருக்கும் இளைஞர்கள் போலவே கோவிந்தராஜும் தனது இளம் பருவத்தில் வாடிக்கையாக வகுப்புகளைதவிர்த்து, ஊர் சுற்றி திரிந்தார். பொருளாதார பின்னடைவு என்பது ஒருவரை எளிதாக தவறான பழக்க வழக்கங்களுக்கும், தவறான சவகாசத்திற்கும் இட்டுச்செல்லும் என்பது கோவிந்தராஜுக்கு மிக நன்றாகவே தெ.
2018-இல்துவங்கப்பட்டஇந்த மையமானது, 21வயதுக்குகீழ் உள்ள கிட்டத்தட்ட 35இளம் மாணவ மாணவிகளைபயிற்றுவித்து வருகிறது. “வேலையில் உள்ள தனிப்பட்ட நபர்கள் பலரும் பயிற்சிக்காக எங்களை அணுகுவதுண்டு. அப்படி அணுகிய அனைவரையும் நாங்கள் பயிற்சியில் சேர்த்துக் கொண்டு இருந்தோம் எனில் எளிதில் எங்கள் மையத்தில் 100 நபர்கள் வரை இன்று இருந்து இருப்பர்,’ என நகைக்கிறார் பயிற்சியாளர் கோவிந்தராஜ். எனினும், இளம் மாணவ மாணவியரை மெருகேற்றி அவர்களுக்கு கிட்டாத வாய்ப்புகளை பெற்று தருவதற்கே தனது பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன எனவும் அவர்களைத் தவிர வேறு எவருக்கும் அவர் பயிற்சி அளிப்பது இல்லை எனவும் கூறுகி.
பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று வரும் எல்லாக் குழந்தைகளும் தேசிய அளவிலோ அல்லது சர்வதேசியஅளவிலோ தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.சமீபத்தில் தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் கோவிந்தராஜிடம் பயிற்சி பெற்ற நான்கு மாணவர்கள் கலந்துக் கொண்டனர். அதில் இருவர் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளுக்கு (Khelo India Youth Games)தேர்வாகி உள்ளனர். தேசிய அளவில் வெண்கல பதக்கம் வென்ற மாணவர் ஒருவர் இந்திய அரசு அளிக்கும் குத்துச்சண்டைக்கான பயிற்சி முகாமில் (Indian Boxing Camp)பயிற்சி பெற தேர்வாகி உள்ளார். “குத்துச்சண்டை அளிக்கும் பணி வாய்ப்பினை தவிர,விளையாட்டு இட ஒதுக்கீட்டின் (sports quota)மூலம்,மேல் படிப்புப் படிப்பதற்கான வாய்ப்பும் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புகளும் இவர்களுக்குக் கிடைக்கின்றன,” என பயிற்சியாளர்கோவிந்தராஜ், பொருளாதாரத்தில்நலிவடைந்த சின்னத்தரிபேட்டையின் இளம் சமூகத்தில் எவ்வாறு மாற்றம் ஏற்படுத்தி வருகிறார் என விவரிக்கிறார் கார்த்திகே.
மென்பொருள் பொறியாளர்கள் (software engineer)ஆன அபிநயா மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து கோவிந்தராஜ் செய்து வரும் இந்த உயரிய செயலுக்கு உதவி புரிவதற்கென ஃபாக்கபாப்பா நிறுவனத்தைத் தோற்றுவித்தனர். “நிலையான பொருளாதார நிலையில் இல்லாத போதும் கூட தனது குத்துச்சண்டை பயிற்சி மையத்தால் கோவிந்தராஜ் ஏற்படுத்தி வரும் மாற்றத்தின் முக்கியத்துவத்தையோ அதற்கு அவர் செய்யும் கடின உழைப்பையோ எவரும் உணரவில்லை. சுற்று வட்டார குழந்தைகளுக்கு மலிவான கட்டணம் வாங்கிக் கொண்டும் பெரும்பாலான நேரங்களில்கட்டணமே வாங்காமல் இலவசமாகவும் பயிற்சிகளை அவர் எடுத்து வந்தார்” என விவரிக்கிறார் கார்த்திகேயன். எனவே அவருக்கு உதவி செய்ய நிதி திரட்டுவதே ஃபாக்கபாப்பா நிறுவனத்தின் முதல் குறிக்கோளாக இருந்தது. அத்துடன், உடைந்த மது புட்டிகளாலும், சிறுநீர் வாடை வீசிய குப்பை குவியலாலும் சேதமுற்ற நிலையில் இருந்த அரசு பொழுதுபோக்கு மையத்தை சுத்தப்படுத்தவும் அந்நிறுவனம் முடிவு செய்தது.
இம்மையத்தின் மாணவர்கள் வெற்றி மாலை சூடிக் கொள்ள எந்நேரமும் ஆயத்தமாகவே இருக்கின்றனர். குத்துச்சண்டைக்கான இந்திய பயிற்சி முகாமிற்கு GSகுத்துச்சண்டைப் பயிற்சி நிறுவனம் ஆனது, தனது மாணவர் ஒருவரை தயார்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறது. மாநில அளவிலான குத்துச்சண்டைதொடர் போட்டிகளிலும் பங்குபெற்ற இந்த பயிற்சி நிறுவனத்தின் மாணவர்கள் 16 பேரும் தங்கப் பதக்கம் வென்று தாயகம் திரும்பினர். எனினும், பயிற்சி மையத்தை பராமரிப்பதும், மாணவர்களுக்கு போட்டிக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதும் அவர்களின் பயணத்திற்குத் தேவையான நிதி திரட்டுவதுமே இந்த பயிற்சி நிறுவனத்துக்கு இருபெரும் சவால்களாக இருந்தன.“இந்த மாணவர்களில் பெரும்பாலானோர், சென்னைக்கு வெளியில் நடக்கும் தொடர் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தயங்கி தயங்கியே தங்கள் ஒப்புதலை தெரிவிக்கின்றனர். ஏனெனில், தங்கும் செலவு, தகுந்த புதையடி (shoe)மற்றும் உபகரணங்களுக்கான செலவுகளைத் தவிர போக்குவரத்துக்கு ஆகும் செலவே தங்களின்வரம்புக்கு மீறியதாக உள்ளது,” என விவரிக்கிறார் கார்த்திகேயன்.
ஸோஹோ (Zoho)நிறுவனத்தின் முன்னாள்ஊழியரான கார்த்திகேயனும் உள்ளூரைச் சேர்ந்த குத்துச்சண்டை பயிற்சியாளரான கோவிந்தராஜும் எவ்வாறு சந்தித்துக் கொண்டனர்?GS குத்துச்சண்டை பயிற்சி மையம் நிறுவப்பட்ட ஆரம்பக் காலக்கட்டத்தை ஒட்டியே கார்த்திகேயனும் தனது கல்லூரிப் படிப்பையும் முடித்து இருந்தார். தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், அதனால் ஏற்படும் மந்தமான வாழ்க்கை முறையை அகற்றி தன்னை மேலும்சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள ஏதேனும் விளையாட்டு ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிவு செய்தார். “அப்பொழுது கல்லூரி படிப்பை முடித்து இருந்ததால் என்னால்உடற்பயிற்சி கூடத்திற்கு உறுப்பினர் கட்டணம் செலுத்தியோ, நகரத்தில் பெயர்போன விளையாட்டுப் பயிற்சி வகுப்புகளுக்கோ செல்ல முடியவில்லை. தற்செயலாக குத்துச்சண்டைக்கான இலவசமான கோடைக் கால பயிற்சி வகுப்புகள் என்ற சுவரொட்டி ஒன்றைக் கண்டுஆர்வம் அடைந்தேன்!” என உற்சாகம் பொங்கக் கூறுகிறார் கார்த்திகேயன். அதனைப் பற்றி மென்மேலும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற அவரின் ஆர்வம் ஆனது, அப்பொழுது எழும்பூரில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்ற பயிற்சியாளரிடம் அவரை இட்டுச் சென்றது. “அங்கு இருந்த மாணவர்கள் அனைவரிலும் நான் ஒருவன் மட்டுமே பணிக்குச் செல்லும் வயது வரம்பிலும், ஆங்கில வழிக் கல்வியில் பயின்று வந்தவனாகவும் இருந்தேன். இருப்பினும் அங்குள்ள அனைவருக்கும் எனக்கும் எவ்வித வேறுபாடையும் நான் உணரவில்லை. வளையத்தில் நாங்கள் அனைவரும் சமமே” என்கிறார் அவர்.
கோடைக் கால பயிற்சியானது மிகவும் சீராக இருந்தமையால் அடுத்து வந்த மாதங்களிலும் பயிற்சியை உத்வேகமாக தொடர்ந்தார் கார்த்திகேயன். நாள் ஒன்றுக்கு, இரண்டு முறை மூன்று மணி நேர குத்துச்சண்டை பயிற்சிக்கு 500 ரூபாயை மாதக் கட்டணமாக செலுத்தினார். நாட்கள் நகர கார்த்திகேயனுக்கு வெறுமனே உடற்பயிற்சியாக மட்டும் இந்த குத்துச்சண்டை வகுப்புகள் இருக்கவில்லை. அவர் நாளடைவில் அந்த குத்துச்சண்டை மாணவர் சமூகத்தின் ஒரு அங்கமானார். தன் பயிற்சி நேரம் முடிந்தப் பிறகு பயிற்சியாளருடனும் மாணவர்களுடனும் அவர் நேரம் செலவிட்டார். அப்பொழுது மாணவர்களின் அம்மாக்களில் ஒருவர் வீட்டில் செய்த தின்பண்டங்களை எடுத்து வருவார். அவர்கள் அனைவரும் உரையாடிக் கொண்டே அதனை பகிர்ந்து உண்டு மகிழ்வர். உற்சாகமாக குழுவாக செயல்படுவதனால், இந்த குத்துச்சண்டைப் பயிற்சி மையமானது தழைத்து ஓங்கியுள்ளது.
குத்துச்சண்டை மூலமாக உடலளவிலும் மனதளவிலும் வளர்வதற்கு, தனக்குப் பெரிதும் உதவி புரிந்த பயிற்சியாளருக்கும் இந்த குழுவிற்கும் ஏதேனும் கைம்மாறு செய்ய வேண்டும் என நினைத்தார் கார்த்திகேயன். இதன் விளைவாக, இந்த குத்துச்சண்டைப் பயிற்சி மையத்தின் பெயரில் படவரி (Instagram)பக்கம் ஒன்றினைத் துவங்கினார் அவர். அவரின் நண்பர்களின் உதவியுடன் பயிற்சியாளர் கோவிந்தராஜின் வகுப்புகளை விளம்பரப்படுத்துவதற்கும், மாணவர்களின் வெற்றிகளை கொண்டாடுவதற்கும் சமூக வலைத்தளங்களுக்கான உட்பொருளை (content)உருவாக்கி வந்தார்.
கொரோனா பெருந்தொற்றானது இந்த மையத்திற்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. எழும்பூர் மைதானத்தில் இருந்து அதனை விட சிறிய இடமான சின்னத்தரிப்பேட்டையில் உள்ள பொழுதுபோக்கு மையத்திற்கு இந்த குத்துச்சண்டை மையமானது இடம் மாற்றப்பட்டது.2019-ஆம் ஆண்டின் இறுதி பகுதியை ஒட்டி இந்தக் குழுவானது பிளவுப்பட்டது மட்டுமல்லாமல், மூட்டைத் தூக்கும் தொழிலுக்கான தேவையும் குறைந்ததால் பயிற்சியாளரால் தன் குடும்பத்திற்கென வருமானம் ஈட்ட முடியவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஸோஹோ நிறுவனத்தில் தனக்கு இருந்த முழு நேரப் பணியில் இருந்து விலகிய கார்த்திகேயன், தனக்குப் பிடித்தமான சில திட்டப்பணிகளில் வேலை செய்தார். அதன் மூலம்பல்வேறுவலைமயமாக்கக் (networking)குழுக்களின் அங்கமாக இருக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்தக் குழுக்களின் உதவியுடன் நிதித் திரட்டி கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு அவர் உணவளித்தார். அப்பொழுது தான்இதே முறையில் குத்துச்சண்டை மையத்தை மீட்டெடுக்கவும் நிதி திரட்டலாம்என்று அவருக்கு ஒரு யோசனைத் தோன்றியது.
ஊரடங்கு விதிகள் தகர்க்கப்பட்டப் பின்னர்இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில்(Indian Institute of Information Technology, Design and Manufacturing – IIITDM)தன்னுடன் உடன் பயின்ற அபிநயா என்பவருடன் இணைந்து அந்த இடத்தை சுத்தப்படுத்தவதற்கும், குத்துச்சண்டைக்கான தரை விரிப்புவாங்குவதற்கும், குத்துச்சண்டை வளையத்தை அமைப்பதற்கும் நிதித் திரட்டினார். இயக்குனர் பா. ரஞ்சித், (Pa. Ranjith)மக்களவை உறுப்பினரான தொல். திருமாவளவன்(Thol. Thirumavalavan), கானா பாடகரான மெட்ராஸ் மிரான் (Madras Miran) போன்ற பிரபலங்கள்கண்டு களிக்கும் விதமாக தொடர் ஆட்டப்போட்டிகளின் மூலம் இந்த பயிற்சி மையமானது மீட்டெடுக்கப்பட்டு மறுபடியும்துவங்கி வைக்கப்பட்டது.
கேலோ விளையாட்டுகள் (Khelo games)விரைவில் நடக்க இருக்கும் நேரத்தில் இரண்டு மாணவர்கள் இளநிலைப் பிரிவினருக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்டனர். மாணவர்களின் பயணச் செலவிற்கு நிதித் திரட்டும் போதுஒருஉற்சாகமான வாய்ப்பு அவர்களை அணுகியது. “பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR)துறையிலும் UUUஅமைப்பு (ஊன், உடை, உறைவிடம்) போன்றலாப நோக்கற்ற அமைப்புகளிலும் பணி புரிந்து வரும் எங்களுடைய நண்பர்கள் சிலர் எங்களுக்கு நிதியுதவி செய்யத் தயாராக இருந்தனர். எனினும் நாங்கள்உரிமம் பெறாத அமைப்பாக இருந்தமையால் எங்களால் அந்த நிதியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை,” என விவரிக்கிறார் அபிநயா. தற்செயலாக அபிநயாவும் கார்த்திகேயனும் இலாப நோக்கற்ற நிறுவனம் ஒன்று கைமாற்றத்திற்கு வந்துள்ளதை கேள்விப்பட்டனர். இந்த வாய்ப்பினை நினைத்து ஆனந்தக் கூத்தாடிய இருவரும் நிறுவனத்தின் முன்னாள் நிறுவனரைத் தொடர்புக் கொண்டனர். “அவர் வெளிநாட்டில் கல்வி பயில செல்வதாக இருந்ததால் இந்நிறுவனத்தை இனியும் இயங்க வைப்பது கடினம் என உணர்ந்தார். எனவே, நல்ல நோக்கத்துடன் இருக்கும் யாரிடமாவது அதனை இலவசமாக கைமாற்ற வேண்டும் என நினைத்திருந்தார்,” என விவரிக்கிறார் கார்த்திகேயன்.
கார்த்திகேயன் மற்றும் அபிநயாவின் தலைமையில் இந்நிறுவனம் ஆனது, பயிற்சி மையத்துக்கு மேம்பட்ட கட்டமைப்பு உருவாக்குவதையும், பயிற்சியாளர் கோவிந்தராஜ் தனது குடுமபத்திற்கு வருமானம் ஈட்டுவதில் கவலைக் கொள்ளாமல், முழுநேரம் பயிற்சி மையத்தில் கவனம் செலுத்தும் விதமாக அவருக்கு ஊதியம் வழங்கி ஆதரிப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நோக்கத்திற்காக நிறுவனர்கள் தீவிரமாக நிதித் திரட்டும் செயலில் ஈடுபட்டு இருக்கும் அதே நேரத்தில், பயிற்சி மையத்தை மேம்படுத்துவதற்குஒரு நம்பகமான வருமான மூலத்தை பயிற்சியாளர் ஏற்படுத்துவதற்கென அவர்கள் ஒரு வணிகஅமைப்புமுறையையும் ஏற்படுத்தி வருகின்றனர். “இது இங்கே முடியப் போவதில்லை,” எனும் அபிநயா, “உள்ளூரிஸ் இருக்கும் விளையாட்டு சமூகங்களில் இன்னும் பல திறன்மிகு, தன்னலமற்ற மக்கள் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு ஒட்டுமொத்தவிளையாட்டு சமூகத்திற்கும் உதவி அளிப்பதே எங்களின் அடுத்தக் கட்ட குறிக்கோள் ஆக உள்ளது” என்கிறார்.
மாவோரி (Māori – நியூசிலாந்துநாட்டில் வசிக்கும்பழங்குடிமக்கள்) மக்கள் பேசும் மொழியில்வம்சாவளி(Geneology)என்றப் பொருள் கொண்ட வார்த்தையிலிருந்து ஃபாக்கபாப்பா அமைப்பின் பெயரானது பெறப்பட்டுள்ளது. என்னதான் இந்தியாவுக்கு குத்துச்சண்டையை ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்து வைத்து இருந்தாலும் உழைப்பாளர்கள் சமூகமானது, அந்த விளையாட்டை தங்கள் சொந்த விளையாட்டாக மாற்றி உள்ளது. அதுவே அவர்களின் சமூகத்திற்கு அடையாளமாகவும் மாறி இருக்கிறது. பெயருக்கு ஏற்றதுப் போல ஏழ்மையின் சங்கிலிகளை உடைத்து இனிவரும் தலைமுறையின் சுதந்திரத்திற்கு வித்திடும் குத்துச்சண்டையைப் போன்ற உள்ளூர் விளையாட்டுகளை ஆதரிக்க இந்நிறுவனமானது திட்டமிட்டுள்ளது.