நம்மில் பெரும்பாலானோர் கண்ணாடியை, எளிதில் உடையக்கூடியதாகவும், அச்சுறுத்தும் ஒரு பொருளாகவுமே எண்ணுவோம். ஆனால் கோலி சோடா கண்ணாடி கலைக்கூடத்தின் (Goli Soda Glass Studio) நிறுவனரான ராதிகா க்ரிஷ் (Radhika Krish) என்பவர் தன் அழகான கண்ணாடிக் கலையால் நம்முடைய அந்த எண்ணத்தை விரிசலடைய செய்கிறார். “ எனது சிறுப்பருவத்தில் நான் கண்ட “கோலி சோடா” புட்டிகள் (bottles) என் ஆவலைத் தூண்டுவதாக இருந்திருக்கின்றன. புட்டியிலிருந்து கோலியை வெளியில் எடுக்க நான் மணிக்கணக்கில் நேரம் செலவிட்டுள்ளேன்,” என ராதிகா தனது நீங்கா நினைவுகளை நினைவுக்கூறுகிறார். “கண்ணாடியைக் கொண்டு நான் கலை உருவாக்குவது எனது சிறுப்பருவ நினைவுகளை திரும்பக் கொண்டு வருகிறது. அதனாலேயே கோலி சோடா கண்ணாடி கலைக்கூடம் (Goli Soda Glass Studio) என்ற பெயரை வைத்தேன். கண்ணாடி, சோடா-சுண்ணாம்பு soda-lime) என்ற பொருளில் இருந்து செய்யப்படுவதாலும் இந்த பெயர் வைக்கப்பட்டது” என புன்முறுவலுடன் கூறுகிறார் ராதிகா.
எப்படி கண்ணாடி கலை என்பது ராதிகாவின் வாழ்க்கைத் தொழிலாக மாறியது? மேலாண்மை தகவல் அமைப்பில் (Management Information Systems) பட்டம் பெற்ற இவர் கேப்பிடல் ஒன் (Capital One) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் ஒரு மருந்தாக்க நிறுவனத்தில் (pharmaceutical company) வேலை செய்தார். சிறிது காலம் மகப்பேறுக்காக (maternity) அவர் பணிச்சுமையில் இருந்து இடைவேளை எடுத்துக் கொள்ள, அந்த இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் பொழுதுப்போக்கு செயலில் ஈடுபட நினைத்தார். அப்பொழுது தான் தற்செயலாக ஒஹியோ மாகாண பல்கலைக்கழகத்தில் (Ohio State University) கண்ணாடி கலைக்கான ஒரு வகுப்பினை கண்டறிந்தார். “நான் முதலில் வாரயிறுதியில் இதற்கான ஒரு அறிமுக வகுப்பிற்கு சென்று எனக்கு பிடித்திருக்கிறதா என பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். இது என் தினசரி வேலைகளுக்கு புறம்பான (extracurricular) ஒன்றே ஏனெனில் என் மகப்பேறுக்கு பின்னர் நான் எப்படியும் என் பணிக்கு திரும்புவதாகவே இருந்தது,” என சிரித்துக் கொண்டே நினைவுக் கூறுகிறார் அவர். “ஒரு வகுப்பு அப்படியே மற்றொரு வகுப்புக்கு இட்டுச் செல்ல அது மீண்டும் மற்றொன்றுக்கு இட்டுச் செல்ல அவ்வாறே நான் இந்த வகுப்பில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்துள்ளேன் என உணர்ந்தேன். இந்த வகுப்புகளின் மூலம் நான் கண்ணாடியைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். நான் ஒஹியோ மாகாண பல்கலைக்கழகத்தில், பல கலை வகுப்புகளுக்கு சென்று வந்து இருந்தமையால், கவின் கலைகள் (fine arts) படித்து அதில் பட்டம் பெறலாம் என முடிவு செய்தேன். இந்த நேரத்தில் தான் நெட்ஃப்ளிக்ஸில் (Netflix) ‘ப்ளோன் அவே (Blown Away)’ எனப்படும் ஒரு மெய் நிகழ்ச்சியைக் (reality show) கண்டேன். இது, நியூ யார்க்கின் புகழ்பெற்ற கார்னிங் கண்ணாடி அருங்காட்சியத்தில் (Corning Museum of Glass) குறுகிய காலம் பணிபுரியும் பணி இடத்திற்காக (residency) பல கண்ணாடி கலைஞர்கள் பங்குபெறும் ஒரு போட்டி. என் கண் முன்னே அந்த கண்ணாடி கலை நிகழ்வதை பார்ப்பது என்பது எனது ஆவலை மேலும் தூண்டியது!”
ஒஹியோ மாகாண பல்கலைக்கழகம் பெரிய வளாகத்தை பெற்று இருந்தாலும் கூட கண்ணாடியூதும் கூடம் (Glass blowing studio) அதன் பின்புறத்தில் ஒரு கொட்டகையிலேயே (shed) இருந்தது. “நான் ஓரிரு முறைகள் அவ்விடத்தை பார்த்து அந்த அறையின் கதவுகளுக்குப் பின்னர் என்ன நடைபெறுகிறது என வியந்துள்ளேன்,” என கண்ணாடி மீது தனக்கு ஏற்பட்ட காதல் நிகழ்வை விவரிக்கிறார் ராதிகா. ஒரு நாள், அவர் அந்த கதவுகளை திறந்து உள்ளே நுழைய ஒட்டுமொத்தமாக ஒரு புதிய உலகினுள் அவர் கால் பதிப்பது போல உணர்ந்தார். க்ரானிக்கல்ஸ் ஆப் நார்னியா (Chronicles of Narnia) என்ற புகழ்பெற்ற ஆங்கில புனைவுக் கதையில் வரும் நார்னியா என்ற கற்பனை உலகில் ஏற்படும் மாயமான அனுபவத்தை போல ஒரு அனுபவத்தை இவர் பெற்றார்.
ஒரு முனையில் இருந்து பாடல் அலறிக் கொண்டு இருக்க , மங்கலான ஒளியுடன் இருந்த அறையை அப்பாடலின் ஒலி உறைப் போல சூழ, ‘ப்ளோ க்ளாஸ் (Blow Glass)’ என்று எழுதப்பட்டிருந்த பழையக்கால நியான் குரிப்பலகையின் மங்கிய முனங்கொலியை (low hum) அந்த சத்தம் மூழ்கடித்தது. வெவ்வேறு வயது மக்களும் அந்த கொட்டகையின் உள்ளே ஆடியவாறும், பாடியவாறும் உற்சாகத்துடன் கண்ணாடியைக் கொண்டு வேலை செய்துக் கொண்டிருந்தனர். “அது ஒரு சிறிய நெருக்கமான குழு என்பதால், சக நண்பர் ஒருவர் கூடத்தில் ஏதேனும் புதிதாக உருவாக்கினாலும் நாங்கள் அனைவருமே ஆரவாரம் கொள்வோம். நாங்கள் கண்ணாடியைப் பற்றி மட்டுமே பேசுவோம். வேறு எது பற்றியும் பேச மாட்டோம். ‘எனக்கான நேரத்தை (me time)’ செலவிடுவதற்கான சிறந்த வழியாக இந்த கண்ணாடிக் கலைக்கூடமே இருந்தது,” என புன்னகையில் பூரிக்கிறார் ராதிகா.
மூன்று மகன்களை வளர்க்கும் பொறுப்பும் அவருக்கு இருந்ததால், ஆரம்பக் காலக்கட்டத்தில் இது அவருக்கு எளிதாக இல்லை. “சில மணி நேரங்களே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதில் அதைத் தாண்டி நிறைய உள்ளது. உங்கள் மனதை பின்தொடர வேண்டுமெனில் நீங்கள் எதையேனும் கைவிடவே வேண்டும்,” என விவரிக்கிறார் ராதிகா. “நான் எனது வேலையை விட்டு விட்டு பகலில் இல்லத்தரசியாகவும் (homemaker) இரவில் மாணவியாகவும் ஆகினேன். இறுதியில் நான் பட்டம் பெற்று ஒரு துணை ஆசிரியை (assistant teacher) ஆகினேன். ஒரு இலாப நோக்கமில்லா கண்ணாடிக் கலை அமைப்பு (non-profit glass art organization) உட்பட கண்ணாடிக் கலை நடைபெற்ற பல தளங்களில் தன்னார்வலராக பணிபுரிந்தேன்.” எளிதில் எந்தக் காரியமும் சலிப்புத் தட்டிப் போகும் அவருக்கு, எவ்வாறு கண்ணாடிக் கலை மட்டும் அவரை ஆர்வத்துடன் தன்பால் ஈர்த்துக் கொண்டே இருந்தது என்பதை நம்மிடம் பகிர்கிறார். “இதுவே என் வாழ்க்கையின் நோக்கம் என்று என் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. அதனாலேயே எனக்கு கண்ணாடி மீது ஒரு அளவற்ற காதல் இருக்கிறது. கண்ணாடியை ஊதுவது மட்டுமல்லாமல் அதனை அரைப்பது, அதில் ஓவியம் வரைவது, பலவண்ண கண்ணாடி கற்களை (mosaics) கையாள்வது – இவையனைத்துமே எனக்கு பிடித்தமானவையே.”
“கண்ணாடிக் கலை என்பது முதலில் அச்சுறுத்துவதாகவே தெரியும்,” என ராதிகா ஒப்புக்கொள்கிறார். ஒன்று, அவ்வளவு மென்மையான பொருள் ஒன்றை எவ்வாறு கவனமாக கையாள்வது என்பது. மற்றொன்று, 2000 டிகிரி (degrees) சூட்டினை உடைய எரிக்கருவியைப் பயன்படுத்துவதில் இருக்கும் பயத்தை கையாள்வது. இது முற்றிலும் வேறொரு விதமான அனுபவம். “ ஒருக் கம்பியில், உருக்கப்பட்ட கண்ணாடியை நீங்கள் பிடித்துக் கொண்டு இருப்பீர்கள். அது சரியான வடிவம் பெறும்வரை அதனை உருக்கியும் இழைத்தும் (shaping) கொண்டே இருக்க வேண்டும். அது செஞ்சூடானவுடன் (red hot) அதனை வடிவம் பெறச் செய்ய ஒரு குறுகிய கால அளவு உங்களுக்கு இருக்கும்,” என அந்த செயல்பாட்டினை நம் முன் படம் போல வார்த்தைகளால் வரைந்துக் காட்டுகிறார் ராதிகா. “ சரியாக அது வடிவம்பெற உங்களுக்கு ஒரு வாய்ப்பே அமையும். எனவே, கண்ணாடியை ஊதக் கிடைக்கும் அந்த கண நேர வாய்ப்பினை தவர விடாதீர்கள். ஒருவேளை எல்லாம் தவறாக முடிந்துவிட்டால் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்,” என்று இந்த நுணுக்கமான கலை வடிவின் செயல்பாட்டினை நம்மிடம் விவரிக்கிறார் ராதிகா.
அவரின் தனிப்பட்ட முடிவால் 2015 இல் அவர் சென்னை திரும்பினார். அவரின் குழந்தைகள், இந்தியாவில் உள்ள அவரின் குடும்பத்துடனான பிணைப்பை உணரவும், அவர்களின் தாத்தா பாட்டியுடன் தொடர்புக் கொள்ளவும், கண்ணாடியுடன் பணி செய்வதற்கான அவருக்கான கொஞ்ச காலத்தைப் பெறவும் அவர் விரும்பினார்.
எனவே, எவ்வாறு கோலி சோடா கண்ணாடி கலைக்கூடம் (Goli Soda Glass Studio) பிறந்தது? சென்னைக்குத் திரும்பிய பின்னர் அங்கு இருக்கும் காலத்தை ஓய்வாகவும், மகிழ்வாகவும் கழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். “நான் சராசரியான ஒரு குடியேறியாகவே (expat) இருந்தேன். ஒரு சுற்றுலாப் பயணி ஒரு புது நாட்டிற்கு செல்கையில் என்ன எல்லாம் செய்வாரோ அதை எல்லாம் நானும் செய்தேன். நன்றாக ஊர் சுற்றினேன். உணவு அருந்தினேன். ஒவ்வொரு தருணத்திலும் மூழ்கி அத்தருணத்தை அனுபவித்தேன்” என அவர் கண்கள் மிளிர நினைவுக்கூறுகிறார். ஓராண்டு இடைவேளைக்குப் பின்னர் தன் கண்ணாடி வேலையை அவர் மீண்டும் தொடங்க முயன்றார். அப்பொழுது தான் உள்ளூரில் எந்த கண்ணாடி கலைக்கூடமும் இல்லை என்று அவருக்கு தெரிய வந்தது. தக்ஷின் சித்ராவின் (Dakshinachitra) கண்ணாடி கலைஞர்களில் ஒருவரான ஸ்ரீனிவாச ராகவன் (Srinivasa Ragavan) என்பவரின் சிறு உதவியுடன், தன் வீட்டு மொட்ட மாடியில் ஒரு தற்காலிக கலைக்கூடம் அமைத்தார் ராதிகா. “ எனக்கு தேவையான கலைப் பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கவில்லை. ஓவியம் சார்ந்த பொருட்களை வாங்க நான் ஹிந்துஸ்தான் வணிக மையத்துக்கு (Hindustan Trading Centre) செல்ல வேண்டியிருந்தது. பெரும்பாலான மற்ற பொருட்களை, பாரி முனையில் (Parry’s corner) அலைந்து திரிந்து வாங்க வேண்டி இருந்தது.”
2017 இல், தனது குழந்தைகள் கோடைக்கால பொழுதுப்போக்கு பயிற்சிகளுக்காக சென்ற க்வெஸ்ட் கற்றல் மையத்தில் (Quest Learning Centre) தன் திறன்களை வெளிக்காட்ட அவருக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அங்கு நடத்தப்பட்ட, பெரியோர்களுக்கான ஒரு திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சியில் தன் கண்ணாடி வேலைப்பாடுகளை அங்குக் கூடி இருந்த பார்வையாளர்கள் முன்னே வெளிப்படுத்தினார் ராதிகா. அவரின் திறனையும் இந்த புது வகையான கலைவடிவத்தையும் கண்டு அவர்கள் ஆர்வத்தில் வியந்தனர். “இந்த கலைவடிவத்தை சென்னையில் ஒருவரும் கற்பிக்கவில்லை என்பது கவலைக்குரிய ஒன்றாகும்” என்று அதிருப்தியில் பெருமூச்சு விட்ட ராதிகா “க்வெஸ்டின் (Quest) குழுவினர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் (Srikanth) என்பவரை அப்பொழுது தான் நான் சந்தித்தேன். கண்ணாடி உருவாக்கத்தை (glassmaking) நான் அவர்களின் இடத்தில் கற்றுத்தருமாறு அவர் பரிந்துரைத்தார்” என தனக்கு கிடைத்த உதவிகளை நினைத்து “நீங்கள் ஒத்த கருத்து உடைய மக்களால சூழப்பட்டால் உங்களுக்கு தேவையான ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறேன்!” என்கிறார்.
“சிறு வயதிலிருந்தே எல்லாவற்றையும், யாரேனும் எனக்கு ஏதுவாக அமைத்துக் கொடுத்து விடுவர். எனவே, நானே தனியாக ஒன்றை அமைக்க வேண்டுமென்பது பயமாக இருந்தது.” ஆனால், அவர் மனம் தளரவில்லை. கோலி சோடா கண்ணாடி கலைக்கூடத்தை (Goli Soda Glass Studio) ஆணிவேரிலிருந்து அமைத்தார் ராதிகா. தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், தனது வேலைக்காகவும், சென்னை எங்கிலும் அவர் கையாளும் வகுப்புகளுக்காகவும் பெரிதளவு பாராட்டினையும் வரவேற்பையும் பெற்றார். ஒவ்வொரு மாதமும் எல்லா வயது வரம்புகளிலும் இருந்து சராசரியாக நாற்பது மாணாக்கர்களை கொண்டு அவர் வகுப்புகள் நடத்தி வந்தார். “பெரும்பாலானோர் பெண்களே. கருவிகளைக் கண்டு பயந்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் எரிக்கருவியை கொண்டு வேலை செய்யும்போது நான் அவர்களின் கையைப் பிடித்துக் கொள்வேன்,” என கூறுகிறார். பெண்கள் அவர்கள் பயத்தினை வெற்றிக்கொள்ளவும், இந்த ஆபத்தான ஆனால் நளினமான கலை வடிவத்தின் மூலம் அவர்களை மேம்படுத்திக் கொள்ளவும் ராதிகா உதவுகிறார். தனது இச்செயலினால் பெருமிதம் கொள்கிறார். “கண்ணாடி கலையைப் பற்றிக் மென்மேலும் கற்றுக் கொள்ள நினைப்பது ஏதேனும் ஒருவர் ஆகினும் நான் எதையோ சாதித்து விட்டதாக உணர்வேன்.”
வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருந்த அவரின் முயற்சிக்கு, கொரோனா பெருந்தொற்று ஆனது தொடர்பில்லா ஈடுப்பாடு (non-contact engagement) என்ற ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியது. அனைவரையும் போலவே ராதிகாவும் படவரியில் (Instagram) ஒரு பக்கம் தொடங்கி அதில் தனது கலை வேலைப்பாடுகளை பதிவிட தொடங்கினார். “சமூக வலைத்தளம் இருக்க இந்த ஒட்டுமொத்த உலகமும் நம் கையில் இருக்கும் சிப்பியைப் போன்றதே!” அவ்வப்போது வகுப்புகள் எடுக்கத் தொடங்கிய அவர், அவரின் கலையில் குவியம் (focus) கொள்ளத் தொடங்கினார். தன்னை பின்தொடர்பவர்களுக்கு, பொருள், நுட்பங்கள் மற்றும் அவரின் வேலைப்பாடுகளுக்கு அடிப்படையில் இருக்கும் செயல்முறையை பற்றியும் கற்பிக்கத் தொடங்கினார்.
தனது முந்தைய பணிகளில் விட, கோலி சோடா கலைக்கூடத்தை (Goli Soda Glass Studio) நடத்துவதன் மூலமே, மேலாண்மைப் பற்றிய நிறையப் பாடங்களை, தான் அதிகம் கற்றுக் கொள்வதாக ராதிகா நம்புகிறார். அவரின் கலைக்கூடத்தை நிலைக்க வைப்பதற்கான உத்திகளையும் வித்தைகளையும் அவர் தற்போது நன்கு அறிந்திருக்கிறார். ஒரு தொழில்முனைவோராக (entrepreneur) இருப்பது பற்றிய அனுபவத்தை அவரிடம் கேட்கையில், “நான் ஒரு தொழில்முனைவோர் என்பதை விட ஒரு கலைஞர் என்றே சொல்லலாம்” என சிரிப்புடன் பதில் அளிக்கிறார். தனது வகுப்புகள் மற்றும் கலைக்கூட வேலைகளைத் தவிர அவரின் வேலைப்பாடுகள், ஆடை வடிவமைப்பு (fashion design) மற்றும் திரைப்பட நிகழ்களன் வடிவமைத்தல் (film set design) ஆகிய துறைகளையும் சென்று அடைந்துள்ளது. அவ்வப்போது ஏதேனும் ஒரு ஆராவாரமிக்க திட்டத்திற்கான (project) வாய்ப்பு வரும். அப்படிப்பட்ட தருணங்களை எதிர்நோக்கியே அவர் வாழ்க்கை நகர்கிறது. மூலப் பொருட்களை பெறுவது என்பது இந்தியாவில் கடினமாக உள்ளது. “கடலுக்கு அருகாமையில் இருந்தவாறே கடலோர தூய்மையாக்க திட்டத்தில் பங்குபெறுவதில் நிறைய பயன்கள் உள்ளன!”. கடலோரத்தில் வீசப்பட்ட புட்டிகளை அவர் சேகரிக்கிறார். ஒவ்வொரு புட்டியும் ஒவ்வொரு மாறி செயலாற்றும். எனவே, சில வரம்பெல்லைகள் (limitations) அதில் இருக்கவே செய்தன. ஆனால் இவை அனைத்துமே ஒரு மாற்றம் ஏற்படுத்துவதற்கான சிறு படிகளே. ராதிகாவின் கலைக்கூடத்தில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள், சென்னை கடலோரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட கண்ணாடி புட்டிகளை மீள்பயன் (reuse) செய்து அவற்றுக்கு புத்துருவாக்கம் கொடுத்து (upcycled) பெறப்பட்டவையே. “ இந்தியாவில் மற்றும் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான அனைத்து கண்ணாடி கலைஞர்களும் ஆண்களாகவே இருக்கின்றனர்.” என நிறைவாக கூறுகிறார் ராதிகா. ராதிகா ஒரு கலைஞர் என்பது மட்டுமல்லாமல் ஒரு புரட்சியாளரும் கூட. இயல்பு நிலையை உடைத்தெறிந்து, நெருப்புடன் விளையாட பல பெண்களை அவர் ஊக்குவிக்கிறார். கண்ணாடி கலைத் துறையில் இருக்கும் பல ஆண்களிடம் தனது திறன்களை நிரூபிக்க நேரிட்டப் பின்னர், தனக்கென ஒரு தனித்துவ இடத்தை உலகெங்கும் உள்ள கண்ணாடி கலைஞர்களின் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் ராதிகா. அவர் மன உறுதியானது உடையாத கண்ணாடிப் போன்றது என்றால் அது.