நாம் சந்திக்க போகும் குடிநீர் நெருக்கடிக்கு (water crisis) தொடர்ச்சியாக வளர்ந்து வரும் இந்த உருவாக்கம் ஒரு தீர்வாக இருக்கலாம். ரமேஷ் குமார் மனித நலன் (humanitarian) சார்ந்த இந்த சவாலுக்கு விடை காண எவ்வாறு முயல்கிறார் என்பதை பார்ப்போம்.
“நான் தான் குடும்பத்தில் முதல் பொறியாளர் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தின் (Indian Institute of Technology – IIT) முதல் பட்டதாரியும் கூட. என் அப்பா ஒரு விவசாயி மற்றும் நகைக் கடை வியாபாரி. வற்றாத குடிநீர் பிரச்சனை ஆண்டுதோறும் இருக்கும் ராஜஸ்தானில் (Rajasthan) உள்ள ஒரு சிறிய கிராமம் தான் எங்களின் சொந்த ஊர்” என கனிவான குரலுடன் ரமேஷ் குமார் சோனி, தயக்கத்துடன் தன் பின்புலத்தை விவரிக்கிறார்.
2010 இல் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர சரியான பொறியியல் பாடப்பிரிவை அவர் தேடிக் கொண்டு இருக்கையில், அவரின் நண்பர்களும், ஆலோசகர்களும் நேனோ தொழில்நுட்பவியல் (nanotechnology) பாடப்பிரிவை அவருக்கு பரிந்துரைத்தனர். அவரின் இந்த தேடல, சென்னையின் புறநகரில் உள்ள எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் (SRM Engineering College) வந்து முடிய அங்கேயே தனது நான்கு ஆண்டுக் கால இளங்கலை படிப்பையும் முடித்தார்.
கல்லூரிப் பருவத்துக்கு பின்னர், இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science – IISc), சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT Chennai) மற்றும் மற்ற இடங்களில் ஆராய்ச்சி சார்ந்த திட்டப் பணிகளில் பணிபுரிந்தார். எனினும் இந்த உள்ளுறை பயிற்சிகள் (internships) திடமான விளைவுகள் ஏதும் தராமலும், குறைந்த நாட்களே நீடிப்பதாகவுமே இருந்தன. “ஒரு சில திட்டப்பணிகள் எல்லாம் வெறும் அறுபது நாட்கள் காலவரையறை (time frame) கொண்டு இருந்தன! அந்த காலவரையறையில் என்ன செய்ய முடியும்?” என நினைவுக் கூறுகிறார் ரமேஷ்.
அதன் பிறகு ஐஐடி சென்னைக்கு (IIT Chennai) சென்ற அவர் அங்குள்ள ஆய்வகங்களில் (las) தானாக முன் வந்து (volunteer) பணிப் புரியத் தொடங்கினார்….
TO READ FULL STORY
Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.
Please sign up with your email below.
or Sign In with
We don’t spam! Read our privacy policy for more info.