கொரோனா பெருந்தொற்று காலம். எங்கும் பொது முடக்கம். பள்ளிகள் இணையத்தில் இயங்கத் துவங்குகின்றன. பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித்ததிற்கான (STEM –science, technology, engineering and mathematics) ஒருங்கிணைந்த ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் சென்னையில் வசிக்கும் இரண்டு பொறியாளர்கள், வீடுகளில் முடங்கிப் போக அதன் பின்னர் நடந்தது என்ன? வாருங்கள் மேலும் வாசிக்கலாம். தங்கள் துளிர் நிறுவனத்தின் அங்கமாக பள்ளிக் குழந்தைகளுக்குக் குறியீடிடல் (coding) கற்பித்து வந்த அபிஷேக் RK (Abishek RK)  நந்தினி சில்கம் (Nandini Chilkam) ஆகிய இருவரும் வீட்டில் அனைவரும் முடங்கி இருக்கும் இந்தச் சமயமே வரைகதை (comic) புத்தக வாசிப்பை மீட்டெடுப்பதற்கான தக்கச் சமயம் எனக் கருதினர். 

நினைவுப் பாதையில் பின்னோக்கி பயணிக்கையில் பள்ளி முடிந்தப் பின்னர் அமர்சித்ர கதைகள், ஆஸ்டரிஸ்க் மற்றும் ஆப்ளிக்ஸ் அல்லது டின்டின் (Amarchitra Kathas, Asterisk & Oblix or TinTin) போன்ற வரைகதைப் புத்தகங்களின் பக்கங்களில் தொலைந்தப் போன மாலைகளும், செய்தித்தாளின் வரைகதைக்கான பக்கத்தில் வந்திருக்கும் கார்ஃபீல்ட் அல்லது கால்வின் அண்ட் ஹாப்ஸ் (Garfield or Calvin and Hobbes) போன்ற வரைகதைகளைக் கண்டு ஆர்பரித்த சனிக்கிழமை காலைகளும் இமி அளவுக் கூட மாறாமல் கண்கள் முன் வந்து நிற்கின்றன. இந்த வரைகதைகளுக்கு என்ன நேர்ந்தது? “இந்தக் காலக்கட்டத்தில் எங்கும் நிறைந்து இருக்கும் காணொளிகளால் இளம் தலைமுறையினர் நாளடைவில் வாசிப்புப் பழக்கத்தையே மறந்து விட்டனர்,” எனக் கூறுகிறார் அபிஷேக்.

அதுவே லேர்ன் வித் காமிக்ஸ் (Learn with Comics/வரைகதைகளுடன் கற்றல்) எனும் துளிர் நிறுவனம் துவங்குவதற்கான ஆணிவேராக அவர்களுக்கு இருந்தது. தாங்கள் முன்னர் துவங்கிய துளிர் நிறுவனத்தில் இருந்த சில பொறியாளர்களும் இவர்கள் இருவரும் இணைந்து தொலைபேசியின் கண்டுபிடிப்பு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தலைப்புகளையும் எளிதான அறிவியல் கருத்துருக்களையும் (concept) மையமாக வைத்து சில வரைகதைகளை உருவாக்கத் துவங்கினர். “நாங்கள் இவற்றைத் திருத்துவதற்காக பதிப்புத் துறையில் இருக்கும் எங்களின் சில நண்பர்களுக்கு அனுப்பி வைத்தோம்,” என விவரிக்கிறார் இந்நிறுவனத்தின் துணை நிறுவனர். “இந்த வரைகதைகளை…

TO READ FULL STORY

Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.

    or Sign In with

    We don’t spam! Read our privacy policy for more info.

      Be the first to receive the most updated stories from GOTN