மேம்பட்ட வாய்ப்புகளை நோக்கி குத்துச்சண்டையிட்டு செல்லும் குத்துச்சண்டை வீரர்கள்
December 12, 2021
கூவம் நதிக்கரையில் தார்ப்பாய், குப்பைக் கூளம், நெருக்கடியான குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கிறது சிறிய சுற்றுச் சுவரால் சூழப்பட்ட300சதுர அடி அளவிலான அரசு பொழுதுபோக்கு மையம். சுவருக்கு மறுபுறத்தில் இருந்துமெல்லமான பெருமூச்சு விடும் சத்தங்களும், கால்களை தேய்க்கும் சத்தங்களும், தூரத்தில் எவரோ எண்களை எண்ணும் சத்தமும் வருகிறது. மங்கிப் போன நீல நிறக் கதவுகள் திறக்கின்றன. கதவுகளுக்கு மறுபுறம், குத்துச் சண்டை வளையத்தை வரையறுக்கும் விதமாக இருக்கும் ஒரு செவ்வக வடிவ களத்தில், ஏழு வயதே ஆன சிறுவர் சிறுமியர் உட்பட இளைஞர்கள் பலர் குத்துச்சண்டை அசைவுகளை அவர்களுக்குள் பயிற்சி செய்துக் கொண்டு இருக்கின்றனர்.வலப்புறத்தில், அடுக்கி வைக்கப்பட்ட வட்டைகளால்(tyre) ஆன, தற்காலிக சிவப்பு மற்றும் நீல வண்ண குத்துச்ச்சண்டை பைகள் ஒரு உலோக கம்பத்தில் தொங்கவிடப்பட்டுள்ளன. பின்புறத்தில் கட்டடத்தின் கட்டமைப்பு புலப்பட அதன் கரைப்பட்டச் சுவர்கள், ஒலிம்பிக் வெற்றி நாயகர் முகமது அலி (Muhammad Ali)மற்றும்முனைவர் பி.ரா. அம்பேத்கர்(Dr. B.R. Ambedkar) ஆகிய இலட்சிய மனிதர்களின் உருவப்பட ஓவியங்களாலும், ஆங்கிலத்திலும் தமிழிலும்எழுதப்பட்டுள்ள ஊக்குவிக்கும் மேற்கோள்களாலும் அழகூட்டப்பட்டுள்ளன. இந்த உருவப்பட ஓவியங்களுக்கு மத்தியில், கருநீல உலோக கதவின் மீது‘GSகுத்துச்சண்டைபயிற்சி மையம்’ (GS Boxing Academy)என்ற வார்த்தைகள் எடுப்பான வெண்மை நிற வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. கதவுக்கு மறுபுறம் சகஜமாக பழகும் பயிற்சியாளர் ஆன U. கோவிந்தராஜ்(U. Govindaraj)என்பவரின் நிழல் உருவம் புலப்படுகிறது. மணலால் நிரப்பப்பட்ட கருநிற குத்துச்சண்டை பைகளை ஓங்கி குத்திக் கொண்டு இருக்கும் அக்கம் பக்க குழந்தைகளுக்கு ஊக்குவிக்கும் வார்த்தைகளை சத்தமாக கூறிக் கொண்டு இருந்தார் அவர். பயிற்சியாளர் கோவிந்தராஜின் குடிசை பகுதியில் இருக்கும் குத்துச்சண்டை பயிற்சி மையமே KSகார்த்திகேயன் (KS Kharthickeyen) மற்றும் JL அபிநயாவின் (JL Abinaya)ஃபாக்கபாப்பா நிறுவனம் (Whakapapa Foundation)தோன்றுவதற்கு மேற்கோளாக இருந்தது.
கோவிந்தராஜ் மின்ட் தெருவில் வசித்து வந்தார். அங்கு வசித்து வருகையில் பல விளையாட்டுகளை அவர் பதம் பார்க்க, தனது தந்தை ஈடுபட்டு இருந்த, வடசென்னையில் பிரபலமான விளையாட்டான குத்துச்சண்டை தனக்கு இயல்பாக வருவதை உணர்ந்தார். அதன்…
TO READ FULL STORY
Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.
Please sign up with your email below.
or Sign In with
We don’t spam! Read our privacy policy for more info.