ஜாக்கி சானின் தீவிர பின்பற்றாளர் ஆன பதினாறு வயது விஷால் குமார் (Vishal Kumar) மணிக்கணக்கில் ஜாக்கி சானின் இசைவான நகர்வுகளை வலையொளியில் (Youtube) கண்டு அவற்றை பகுத்தாய்ந்து வந்தார். அவ்வாறு காண்கையில், வலையொளியின் பரிந்துரைக்கப்படும் காணொளிகள் (Videos) பகுதியில் தாண்டோட்டம் (பார்க்கூர் – Parkour) பற்றிய காணொளி ஒன்றை அவர் தற்செயலாக கண்டார். “நான் தீவிரமாக செய்து வரும் ஒரு செயலுக்கு உண்மையிலேயே ஒரு பெயர் இருப்பது எனக்கு அப்பொழுது தான் தெரிந்தது!” என நினைவு கூறுகிறார். தாண்டோட்டம் (Parkour) என ஒரு பயிற்சி வகை இருப்பதை கண்டுபிடித்த அந்த உற்சாகமான தருணத்தில் இணையத்தில் அதைப் பற்றிய தன்னால் முடிந்த எல்லா விவரங்களையும் தேடிப் பிடித்து படித்தறிந்தார் விஷால். அப்பொழுது தான் அவரைப் போன்று தாண்டோட்டத்தில் (Parkour) ஆர்வம் உள்ள பலர் இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. ஆர்க்குட் (Orkut) என்ற சமூக வலைத்தளத்தில் (2009-ல் முகநூலுக்கு (Facebook) முன்னோடியாக இருந்த ஒரு தளம்) தாண்டோட்டத்தில் ஆர்வமுள்ள ஐம்பது நபர்கள் கொண்ட ஒரு குழு இருந்தது. அதில் சென்னையின் தாண்டோட்ட ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர். வார இறுதிகளில் திறந்தவெளிகளான பெசன்ட் நகர் கடற்கரை  மற்றும் அண்ணா நகர் டவர் பூங்காவில் சந்தித்தும், பயிற்சி செய்தும், ஒருவருக்கொருவர் நகர்வுகளை (Movements) கற்றுக் கொடுத்தும் வந்தனர். “ஆனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் அக்குழுவில் இருந்த நபர்களின் எண்ணிக்கை வெறும் நான்காக குறைந்தது. அனைவராலும் கடுமையான பயிற்சிகளை தாக்குப்பிடிக்க முடியவில்லை.”

தாண்டோட்டம் என்றால் சரியாக என்ன என நீங்கள் கேட்கிறீர்களா? கலை வடிவமா அல்லது விளையாட்டு வகையா?  இவை  இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு வரையறுக்க முடியாத இடத்திலேயே தாண்டோட்டம் தற்பொழுது உள்ளது. இராணுவத்தில் தடை தாண்டும் பயிற்சி வகை (military obstacle course training) மற்றும் தற்காப்புக் கலையில் (martial arts) இருந்து துளிர்விட்டு வந்த கிளையான தாண்டோட்டம் அவற்றில் இருக்கும் நகர்வு பாணிகளையும் (movement styles), நுட்பங்களையும் (techniques) தன்வசம் கொண்டு நகர்புற சூழலுக்கு ஏற்றவாறு அவற்றை வடிவமைத்துள்ளது. என்னதான் பார்ப்பதற்கு கடினமாக தெரிந்தாலும் ஒரு…

TO READ FULL STORY

Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.

    or Sign In with

    We don’t spam! Read our privacy policy for more info.

      Be the first to receive the most updated stories from GOTN