பிறந்தது தில்லியில, உற்பத்தியானது (வளர்ந்தது) சென்னைல (எனப் பெருமையாக தங்களைத் தாங்களே இவ்வாறு அறிமுகம் செய்யும்)—ஹர்திக் மற்றும் கௌதம் நருளா (Hardik and Gautam Narula), பெரும்பாலும் தங்கள் சட்டைக்கைகளை சுருட்டிவிட்டுக் கொண்டு இயந்திரங்களில் மறைவாக இருக்கும் இயந்திரப் பாகங்களை அகற்றுவது அல்லது ஓர் மேசையின் மேலே பரப்பிக் கிடக்கும் பலதரப்பட்ட மின் பொருட்களில் இருந்து உருவப்பட்ட, பழைய மற்றும் புதிய வன்பொருட்களின் (hardware) குவியலைக் கொண்டு ஏதோ செய்வது போன்ற ஒரு சிலரே ஈடுபடும் (esoteric) பொழுதுபோக்குகளில் தங்கள் நேரத்தை செலவு செய்யும் அரிதான முனைப்பான பொறியாளர்கள். “ரொம்ப சின்ன வயசுல இருந்தே இயற்பியல், இயந்திரவியல் (mechanics) மற்றும் மின்னணுவியல் (electronics) விதிகள வெவ்வேறு முறைகள்ல பயன்படுத்தி பாக்குறது எங்களுக்கு உற்சாகமான செயலா இருந்துச்சு,” என ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு சிரிக்கத் துவங்கும் சகோதரர்கள், “நாங்க இந்த உலகத்துக்கு உதவுற தொழில்நுட்பத்த உருவாக்கணும்னு நினைச்சோம்.”


இருவரும் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்று இருக்க, ஹர்திக்கோ கலப்பு மின்சார வாகனத் துறையைச் (hybrid electric scooter) சார்ந்த, புனேவில் இருந்த ஓர் துளிர் நிறுவனத்தில் பணியாற்றி அனுபவம் பெற்று இருந்தார். சகோதரர்கள் இருவரும் தங்களின் சொந்த நிறுவனம் துவங்குவதற்கு 2019-ஆம் ஆண்டே (மின்சார வாகனச் சந்தை ஒருபுறம் உயர்ந்து கொண்டிருக்க) சரியான ஆண்டு என முடிவு செய்தனர். சென்னைக்கு புலம் பெயர்ந்த இருவரும், ஆற்றல் சேமிப்பிற்கு தீர்வு (energy storage solution) வழங்கும் துறையில் தங்களின் சொந்த துளிர் நிறுவனத்தை எக்லெக்டிக் பவர் பேக்ஸ் (Eclectech Power Packs LLP) என்றப் பெயரில் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமமாக (LLP) நிறுவினர்.
சகோதரர்கள் இருவரும் தாங்கள் வளர்ந்த நகரத்துக்கு மீண்டும் வந்துள்ளனர்—இம்முறை தொழில்முனைவோர்களாக. திருவான்மியூரில் கடை ஒன்றை அமைத்த இருவரும்,…
TO READ FULL STORY
Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.
Please sign up with your email below.
or Sign In with
We don’t spam! Read our privacy policy for more info.