“இந்தியாவில் கல்விப் பயின்ற எல்லாப் பெண்களும் வேலைக்குச் சென்றால் நம் உள்நாட்டு உற்பத்தியானது (GDP – Gross Domestic Product) குறைந்தளவு 25% உயரும்!” என்று சமீபத்தில் தான் கண்ட அறிக்கையிலிருந்து ஒரு புள்ளிவிவரத்தை நினைவுக் கூறுகிறார் ராணி. “ஒரு சில மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் உயர்கல்வி சேரும் பெண்களின் சதவீதம் அதிகபட்சமாகவே உள்ளது. மேல்நிலைக் கல்வியில் சேரும் மாணவர்களுள் கிட்டத்தட்ட 50% பேர் பெண்களாகவே உள்ளனர்,” என குறிப்பிடுகிறார் ரஜனி. அப்படியானால் ஏன் இது நம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிப்படுவது இல்லை?

பாலினச் சமத்துவத்தின் (Gender Parity) மூலம் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தும் நோக்கத்தோடு ரஜனி சேஷாத்ரி (Rajani Seshadri) மற்றும் ராணி முரளிதரன் (Rani Muralidharan) ஆகிய இருவரும் இணைந்து டிசம்பர் 2019-ஆம் ஆண்டு இன்டிபெண் கனெக்ஷன்ஸ் (indePenn Connections) என்ற நிறுவனத்தை தோற்றுவித்தனர். டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ரஜனி, ஐரோப்பாவில் பல லாபம் ஈட்டும் வணிகங்களை உருவாக்கியதன் மூலம் தன் பணிவாழ்வில் பல படிகள் முன்னேறி தற்பொழுது IWN-இல் (IWN – இந்தியன் விமென் நெட்வொர்க்) தலைமைப் பொறுப்பில் உள்ளார். ராணி பட்டயக் கணக்காளராக (Chartered Accountant) பணிப்புரிந்தப் பின்னர் தற்பொழுது தொழில் முனைவோராக உள்ளார். திருச்சியில் இருந்த அவர் ஆண்கள் அதிகம் வேலை செய்யும் உற்பத்தித் துறையிலேயே அதிக காலம் பணியாற்றினார். வெவ்வேறு துறைகள் எனினும் கிட்டத்தட்ட பத்து ஆண்டு காலம் நண்பர்களாக இருந்த ரஜனியும் ராணியும் ஒரு விஷயத்தை கவனிக்க ஆரம்பித்தனர். ஆண்டுகள் உருண்டோட தங்கள் பணிவாழ்க்கையில் அவர்கள் ஒருபுறம் வளர்ச்சிப்பெற மற்றொரு புறம் அவர்களுடன் வேலைப்பார்த்து வந்த சக பெண் ஊழியர்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறையத் துவங்கினர். “பெரும்பாலான பெண்கள் இடைநிலை மேலாண்மையில் (Middle management) பணிபுரிகையில் வேலையை கைவிடுகின்றனர்,” என்று கூறும் ரஜனி, “திருமணம், கடினமான கர்ப்பக் காலம், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுவது அல்லது வயதானவர்களை கவனித்துக் கொள்ளுவது கூட இதற்கான காரணங்களாக இருக்கின்றன. நாங்களும் இவை அனைத்தையும் அனுபவித்திருக்கிறோம் என்பதனால் மற்ற பெண்களின் நிலைமைகளும் எங்களுக்கு நன்றாகவே புரிந்தது”…

TO READ FULL STORY

Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.

    or Sign In with

    We don’t spam! Read our privacy policy for more info.

      Be the first to receive the most updated stories from GOTN