பள்ளிக்கரணையில் ஆங்காங்கே படர்ந்து இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நடுவே உள்ளது பழமை சாயல் கொண்ட ஓர் கலைக்கூடம். பழமையான பொருட்களாலும், அரிய புத்தகங்களாலும், அரசியல் மற்றும் வரலாற்று தலைவர்களின் ஒளிரும் சிலைகளாலும் நிறைந்த “சிலை” (Silaii) என்ற பெயர் கொண்ட சிலைகள் செய்யும் கலைக்கூடம் இதுவாகும். இங்கே பத்து அங்குலம் உயரம் கொண்ட சிலையையும் நீங்கள் காணலாம். தோல் உயரத்திற்கு மேல் இருக்கும் ஏழு அடி உயர சிலையையும் காணலாம். “சிலை என்ற பெயரின் அழகே அதன் எளிமையான உச்சரிப்பு தான். உலகத்தின் எந்த பகுதியில் இருந்து வருபவரும் சிலை என்ற சொல்லை கிட்டத்தட்ட அதன் உச்சரிப்பு மாறாமலேயே உச்சரிப்பர்” என தனது கனவு திட்டமான “சிலை” பற்றி விவரிக்கிறார் அருண் டைட்டன். 2019-இல் தோன்றிய சிலை கலைக்கூடம் உலகளவிலான சிலைகள் செய்யும் ஓர் கலைக்கூடமாக உருமாறும் வண்ணமே தோற்றுவிக்கப்பட்டது.

பள்ளிக்கூடத்தில் மந்தமான மாணவராகவே அருண் பார்க்கப்பட்டார். “தாரே சமீன் பர் என்ற இந்தி படத்தில் வரும் சிறுவனைப் போலவே நானும் பள்ளியில் மற்ற மாணவர்களுக்கு மத்தியில் எழுதவும் படிக்கவும் சிரமப்பட்டேன். சொல்லப் போனால் நான் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தேன். சென்னையில் உள்ள கவின்கலைக் கல்லூரியில் (Government College of Fine Arts) சேர்வதற்காகவே மீண்டும் அந்த தேர்வினை எதிர்கொண்டேன். ஏனெனில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் மட்டுமே அந்த கல்லூரியில் இடம்பெற முடியும் என்று இருந்தது.”

கல்லூரி வாழ்க்கை ஒரு புது அத்தியாயமாக இருந்தது. கட்புல வடிவமைப்பில் (Visual Design) தனக்கு ஆர்வம் இருப்பதை கண்டறிந்த அருண் அதில் கைத்தேர்ந்தவராக விளங்க முடிவு செய்தார். தனக்கு தகுந்த இடத்தை ஒருவழியாக கண்டறிந்தார் அருண். “கவின்கலைக் கல்லூரியானது வெவ்வேறு படிப்புகளை உள்ளடக்கியவாறு இருந்தது. சிலைகள் மற்றும் சிற்பங்கள் செதுக்குதல், அச்சுக்கலை, கட்புல வடிவமைப்பு, பீங்கான் கலை மற்றும் ஓவியம் போன்ற துறைகளில் படிப்புகளை அது வழங்கியது. என்னதான் கட்புல…

TO READ FULL STORY

Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.

    or Sign In with

    We don’t spam! Read our privacy policy for more info.

      Be the first to receive the most updated stories from GOTN