“புதுசா கல்யாணம் ஆன ஜோடி ஒன்னு அவங்க கல்யாண மாலை-ல இருந்த பூக்கள அனுப்பி, அவங்க நினைவுப் பெட்டில அதையும் சேர்க்க சொன்னாங்க!” என பூரிப்புப் பொங்கக் கூறுகிறார் அம்ருதா கிரிராஜ் (Amrita Giriraj). அலன்காரா (Alankaara) நிறுவனத்தின் தயாரிப்புகளை செதுக்குவது வாடிக்கையாளர்களின் தனித்துவமான வாழ்க்கைக் கதைகளே. அணிகலன்கள் மற்றும் வாழ்முறை பொருட்களைத் தயாரிக்கும் அலன்காரா, பிசின் கலையின் மூலம் நினைவுகளைப் பொக்கிஷமாக்கி காலச்சுவடுகளை பத்திரப்படுத்தும் செயலில் முனைப்பாக ஈடுபட்டு வருகிறது.

தனது பதினைந்து வயதில், விலங்கியல் மற்றும் தாவரவியலை உள்ளடக்கிய அறிவியல் பாடப்பிரிவான தூய அறிவியலில் தனக்கு பெரிதும் ஆர்வம் இருப்பதை கண்டறிந்தார் அம்ருதா. தனது உயிரியல் பதிவு குறிப்பேட்டில் பூக்களின் பாகங்களை வரைவதானாலும் சரி, பூக்களை கூராய்வு செய்வதானாலும் சரி—செடிகளின் உலகத்தில் தான் இருக்கும் பொழுது தன்னைச் சுற்றி நேரம் உறைவதுப் போல உணர்ந்தார் அம்ருதா.  

பெரும்பாலான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அறியாமையால் தங்களின் விருப்பப் பாடப்பிரிவை தேர்வு செய்யாமல், எது படித்தால் வேலை கிடைக்கும் என்பதில் கவனம் செலுத்தி தடம் மாறி செல்வதுண்டு. அவர்களைப் போலவே அம்ருதாவும் தனது தனித்துவமான ஆர்வங்களில் பெரிதளவில் கவனம் செலுத்தவில்லை. தனது பதினோறாம் வகுப்பில், மானுடவியல் (Humanities) பாடப் பிரிவை தேர்வு செய்த அவர், வரலாறு, உளவியல் போன்ற பாடங்களைப் படிக்கத் துவங்கினார். “பள்ளியில் படிக்கும் பொழுது நம்மளோட பெரிய குறிக்கோளே தேர்வுல தேர்ச்சி பெறனும்னு தான் இருந்துச்சு,” என தன் நினைவலைகளில் இருந்து மீண்டவாறு சிரித்துக் கொண்டே கூறுகிறார் அவர். “என்ன இருந்தாலும் நான் கடந்து வந்த பாதையையும் நான் எடுத்த முடிவுகளையும் இப்போ யோசிச்சு பாத்தா, இது எல்லாமே ஏதோ ஒரு வகையில் நான் அலன்காரா துவங்குறதுக்கு தூண்டுகோலா இருந்துருக்குனு தெரியுது.”

காட்சிக் கலையில் (visual arts) நான்கு ஆண்டுகள் தனது இளங்கலைப் படிப்பை முடித்த அம்ருதா, பெங்களூருவில் இருக்கும் ஸ்ருஷ்டி கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப பயிலகத்தில் (Srishti Institute of Art, Design and Technology), ஆடை வடிவமைப்பில் முதுகலைப்…

TO READ FULL STORY

Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.

    or Sign In with

    We don’t spam! Read our privacy policy for more info.

      Be the first to receive the most updated stories from GOTN