2020-இல் கொரோனா பெருந்தொற்றின் முதலாவது அலையின் போது ஒரு ஆராய்ச்சி திட்டத்துக்காக ரஷ்யாவிற்கு சென்றார் தேன் (Thein). ஆனால், விதியின் விளையாட்டால் அவர் அங்கு சென்ற நேரம் பார்த்து நாடு முழுவதும் பெருந்தொற்றினால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. ஒரு சிறிய சமையல் இடம் கொண்ட சிறிய அறையில் சிக்கிக் கொண்டார் அவர். முடிவிலா மௌனத்தையும், நாட்களையும் கடக்க அவரின் மடிக்கணினி மட்டுமே அவரிடம் இருந்தது. அவருக்கு அந்த நாட்டின் மொழியும் தெரியாது; அங்கு வசித்த வந்த எந்த நபரையும் தெரியாது. எனவே, இணையத்தளம் ஒன்றினைத் துவங்கி இணையத்தில் இருக்கும் மக்களோடு உரையாடுவதன் மூலம் தன் நீண்ட பொழுதுகளை கழிக்க முடிவு செய்தார். அறையின் மூலையில் அமர்ந்து இருந்த தேனின் முகம், மடிக்கணினி திரையிலிருந்து வந்த பிரகாசமான ஒளியில் மிளிர ‘Nonurbanism (நகர்சாரா வளர்ச்சி இயக்கம் – நகர்மயமாக்கப் படாத இடங்களின் வளர்ச்சிக்கான யோசனைகளையும் தீர்வுகளையும் உருவாக்கும் ஒரு இயக்கம்)’ என்ற வார்த்தைகளை தட்டச்சு இட்டார்.

“நகரத்தில் இருக்கும் நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான பூர்வீகக் கதைகள் இருக்கும். உங்களுக்கு முந்தைய இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளை எடுத்துக் கொண்டால் உங்களின் தாத்தா – பாட்டி அல்லது கொள்ளு தாத்தா – கொள்ளு பாட்டி நிச்சயம் விவசாயம் போன்ற முதன்மைத் தொழிற்துறை (primary sector) தொழில்களில் ஏதேனும் ஒன்றினை செய்தும் கிராமத்தில் வசித்து வந்துமே இருந்திருப்பர். என் கதையும் இதைப் போன்றதே,” எனக் கூறுகிறார் கட்டடக்கலைஞரும் Nonurban Foundation (நகர்சாரா வளர்ச்சி) எனும் நிறுவனத்தின் நிறுவனரான தேன் சௌரிராஜன். “என் தாத்தா ஒரு விவசாயி. 1980-களின் ஆரம்பக் காலக்கட்டத்தில் சென்னைக்கு புலம்பெயர்ந்த அவர் சுயமாக தொழில் ஒன்றை துவங்கினார். எட்டாவது வகுப்பு வரை அடிப்படைக் கல்வி பெற்று எங்கள் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பாலானோருக்கு வேலை செய்வதற்கான திறன்களைப் பெறச் செய்து, அவர்களை அவரின் தொழிலில் பணியமர்த்தினார். இன்றளவும் என் குடும்பத்தில் பலரும் தஞ்சாவூரில் இருக்கும் ஒரு கிராமத்திலேயே வசித்து வருகின்றனர். எனவே, என் உறவுக்கார சகோதர சகோதரிகள் வளர்ந்த முறையிலேயே என்னால் ஒரு வேறுபாட்டினை…

TO READ FULL STORY

Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.

    or Sign In with

    We don’t spam! Read our privacy policy for more info.

      Be the first to receive the most updated stories from GOTN