தாமஸ் மெர்டன் (Thomas Merton) எனும் அமெரிக்க டிராப்பிஸ்ட்  துறவியின் (Trappist – கிறித்துவ மதத்தின் கதோலிக பிரிவின் ஓர் ஒழுங்குமுறை) புகழ்மிக்க வாசகம் இது – “கலை என்பது நம்மை அடையாளம் காண்பதற்கும் அதே நேரம் நம்மையே நாம் தொலைத்து விடுவதற்கும் வித்தாக இருக்கும்.” இவ்வாசகம், தற்செயலாக கலை ஆர்வலர் ஆனவரும், துணியாலான குறிப்பேடுகளை (journal notebook) கையால் செய்யும் சிட்டா ஹேன்ட்மேட் (Citta Handmade) நிறுவனத்தின் நிறுவனருமான நிரஞ்சனா கிருஷ்ணகுமாருக்கு (Niranjana Krishnakumar) சீராக பொருந்தும் எனலாம்.

நிரஞ்சனா ஓவியங்களிலும் வரைகலையிலும் எந்நேரமும் ஊறிப் போய் இருந்தவர் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் புது விஷயங்களை செய்துப் பார்ப்பதை விரும்புவோர் பட்டியலுக்கு இவர் நிச்சயமாக தேர்ச்சி பெறுபவர் தான். அவருடைய ஆர்வமும், கற்றலுக்கான தீரா பற்றும், களத்தில் இறங்கி செயல்படும் தன்மையும் அவரைப் பல பாதைகளில் இட்டுச் சென்றன. நிரஞ்சனா அல்டிமேட் ஃபிரிஸ்பீ (Ultimate Frisbee) எனப்படும் விளையாட்டை நெறிவாக விளையாடியவர்; மின்னணு தொடர்புத்துறையில் (electronic media) பட்டம் பெற்றவர்; மேலும் அரசு சாரா அமைப்பான (NGO) இந்திய சூழலியலாளர் அமைப்பின் (EFI – Environmentalist Foundation of India) நிறுவன தன்னார்வலர்களுள் ஒருவரும் ஆவார்.

தான் தேர்வு செய்த பட்டப்படிப்பு தனக்கு ஒரு முழுமையான உணர்வினை தர தவறியதால் அதிருப்தியின் விளிம்பில் இருந்த நிரஞ்சனா, அசோகா பல்கலைக்கழகம் வழங்கும் இளைய பாரதம் ஆதரவூதியத் திட்டத்தினைப் (YFI – Young India Fellowship) பற்றி அறியலானார். ஓராண்டில் இருபத்து நான்கு பாடங்களை வழங்கும் பல்துறை திறன் (liberal arts) வளர்க்கும் ஓர் திட்டமாக அது இருந்தது. நிரஞ்சனா போல பல்துறைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஒரு வரப்பிராசதம் என்றே சொல்லலாம். “பெரும்பாலானோர் தங்கள் பணிவாழ்க்கையில் ஒரு மாற்றுப் பாதையினை எதிர்பார்த்தே YIF திட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் எனக்கோ அதுவே என் வாழ்க்கைப் பணியின் துவக்க இடமாக இருந்தது.”

    Be the first to receive the most updated stories from GOTN