பொம்மை வடிவமைப்புத் துறையில் கனகா ஆனந்த் அவர்களின் நியதி நம்மை அவரின் குழந்தைப்பருவக் காலத்துக்கு இட்டுச் செல்கிறது. இவர் இன்று மணியம்ஸ் (Maniams) என்றொரு தனித்துவமான வடிவமைப்பு நிறுவனம் வடிவம்பெற, தனக்கும் தன் மறைந்த சகோதரர் கார்த்திக் ஆனந்திற்கும் உதவியாக இருந்த சிறு சிறு நுணுக்கங்களை ஒருங்கிணைத்து தன் வாழ்க்கை சம்பவங்களை அழகாக நம் முன் விவரிக்கிறார்.

சிறு வயதிலிருந்து கனகாவை அறிந்தவர்கள் அவர் படைபாக்கத் தொழிற்துறையில் (Creative Industry) தடம் பதிப்பார் என்று கண்டறிந்தனர். மும்பையில் வளரும்போது தனக்குத் தெரிய வந்த ஒவ்வொரு ஓவியப் போட்டியிலும் பங்குபெற்றது மட்டுமல்லாமல் கேம்லின் (Camlin) மற்றும் யங் வேர்ல்ட் (Young World – தி ஹிந்து நாளிதழின் துணைப் பத்திரிக்கை) நடத்திய புகழ்பெற்ற போட்டிகளிலும் பரிசுகளை வென்று குவித்தார். தன் குழந்தைப் பருவத்தின் ஆரம்பக் காலத்திலேயே குடும்ப சூழலால் ஜெர்மனிக்கு அவர்கள் புலம்பெயர்ந்தது அவர் மீது ஒரு பெரிய விளைவினை ஏற்படுத்தியது. “பள்ளியில் அனைத்துமே செயல்முறை (Hands-on) சார்ந்ததாகவே இருந்தது. வரலாறு மற்றும் புவியியல் போன்ற பாடங்கள் கூட செய்முறை வழியாகக் கற்றுத் தரப்பட்டது” என்று அவர் நினைவுக் கூறுகிறார்.

சில ஆண்டுகளிலேயே மும்பைக்குத் திரும்பிய அவரின் குடும்பம், தென்னிந்தியா உடனான அவர்களின் பிணைப்பை தொடர வேண்டுமென்ற முடிவை எடுத்தனர். சௌத் இந்தியா விஸ்கோஸ் பிரைவட் லிமிடெட் (  SIV – South India Viscose Pvt Ltd ) என்ற நிறுவனத்தில் அவரின் தந்தைக்குக் கிடைத்த தலைமை செயல் அதிகாரி (CEO) பொறுப்பு அவர்களை கோயம்புத்தூருக்கு இட்டுச் சென்றது. அங்கேயே அவர்கள் வீடு கட்டவும் முடிவெடுத்தனர். “அப்பொழுது தான் நான் ஒரு கட்டடக்கலைஞரை (Architect) சந்தித்தேன்” என்கிறார் கனகா. “எனது அப்பா, வீட்டில் என்ன நடந்தாலும் அதில் குடும்பத்தினரையும் ஈடுபடுத்தும் பழக்கம் உள்ளவர். எனவே, அந்தக் கட்டடக் கலைஞருடன் எங்களின் தேவைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வோம்.” வெகு விரைவிலேயே அந்தக் கட்டடக்கலைஞர் உடனான கலந்துரையாடல்களும், வடிவமைப்பு உருபெற்று வருவதைக் காணும் அனுபவமும், சிறுமியான கனகாவினுள் கட்டடக்கலைக்கான அவரின் வேட்கையின், புதிதாய்…

TO READ FULL STORY

Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.

    or Sign In with

    We don’t spam! Read our privacy policy for more info.

      Be the first to receive the most updated stories from GOTN