அடுத்த தலைமுறை மாணவர்களுக்கான சிறந்த பயிற்சியாளர்களை கண்டறிய உதவும் சிறந்த தளம் ஒன்றை இரண்டு கட்டடக்கலை (Architecture) பட்டதாரிகள் தோற்றுவிப்பர் என்று எவரும் யூகித்து இருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளை கற்க வைப்பதற்கான ரகசியத்தை ரோஹித் ரஹேஜா (Rohit Raheja ) மற்றும் சச்சித் துகர் (Sachit Dugar) ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளனர். மென்டார் மேட்ச் (Mentor Match) எனப்படும் அவர்களின் கல்விதொழில்நுட்ப (Edtech) இணையத்தளத்தின் வழியாக இக்குழு, இந்தியா முழுவதிலும் உள்ள மூன்றாம் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்புக்கு இடைப்பட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளை, ஐஐடி (IIT – இந்திய தொழில்நுட்ப கழகம்), பிட்ஸ் (BITS – பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம்), க்ரைஸ்ட் கல்லூரி (Christ College), என்ஐஐடி (NIIT – தேசிய தகவல் தொழில்நுட்ப கழகம்) போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் கல்லூரி மாணவ மாணவிகளுடன் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் (Matched). “இதன் கருத்துக்கோள் (Concept) என்பது மிகவும் எளிமையானதே. ஒரு மாணவர் சமூக வலைதளங்களில் தனது ஆசிரியரை பின்தொடரவோ, முந்தைய இரவு தான் சென்ற கொண்டாட்ட நிகழ்வைப் பற்றி அவர்களிடம் வெளிப்படையாக பேசவோ முன்வரமாட்டார்” என்று சொல்லும் ரோஹித், இந்த ஆசிரியர் – மாணவர் இடைவெளியை சரி செய்யும் நோக்கத்திலே, அமெரிக்காவின் பிக் பிரதர்ஸ் பிக் சிஸ்டர்ஸ் (Big Brothers Big Sisters) வழிகாட்டி அமைப்பினைப் போலவே தங்களது இளம் தொடக்கநிலை நிறுவனம் (Start-up) செயலாற்றி வருவதாக கூறுகிறார்.
“கட்டடக்கலை பட்டதாரிகள் இருவர் எவ்வாறு ஒரு கல்விதொழில்நுட்பத் துறையில் செயல்புரிகின்றனர் என பலரும் ஆச்சரியப்படுவதுண்டு.” தன் கட்டடக்கலைக் கல்வியே இந்த தனித்துவமான முயற்சியை உருவாக்க தனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக ரோஹித் கூறுகிறார். சொல்லப் போனால் மென்டார் மேட்ச் (Mentor Match) முயற்சிக்கு அடித்தளமாக இருக்கும் ஒட்டுமொத்த யோசனையுமே அவர் தன் நண்பரின் வீட்டில் கட்டடக்கலை செயல் திட்டத்துக்காக (Architecture project) அவருடன் இணைந்து செயல் புரிகையில் உதித்ததே. அவர் நண்பரின் அம்மா தன் மகளின் பத்தாம் வகுப்புக்கான தனிப்பயிற்சிக்காக (Tuition) அதிக…
TO READ FULL STORY
Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.
Please sign up with your email below.
or Sign In with
We don’t spam! Read our privacy policy for more info.