பிரசன்னா தனது பெற்றோர்களுடன் புத்தகக் கடைக்கு வாரந்தோறும் செல்வதுண்டு. அப்படியொரு சமயம் அவர் புத்தகக் கடைக்கு சென்றார். ஃபெமினா, நேஷனல் ஜியோகிராபிக் மற்றும் இந்தியா டுடே போன்ற பிரபல இதழ்கள் வைக்கப்பட்டிருந்த அடுக்குகளைக் கடந்து அவர் ஓடினார். கடையின் பின்புறத்தில் குழந்தைகளுக்கான இதழ்கள் இருந்த பிரிவில் தேடித் துருவி டிடக்டிவ் (Detective) இதழின் சமீப பதிப்பை எடுத்தார்.
“நான் சிறுமியாக இருந்த பொழுது குற்றவியல் மற்றும் கொலைக் கதைகள் (crime and murder stories) படிப்பதை பெரிதும் விரும்பினேன்,” என புன்முறுவல் செய்கிறார் முனைவர் பிரசன்னா கெட்டு (Dr. Prasanna Gettu). இளம் பருவத்தில் அவருக்கு இருந்த அதிகமான புத்தகங்கள் படிக்கும் பழக்கமானது குற்றவியலுக்கான ஒரு தீரா ஆர்வத்தையும் குற்றத் தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பிற்கான சர்வதேச அமைப்பு எனப்படும் PCVC (International Foundation for Crime Prevention and Victim Care) எனும் தனது அரசு சாரா அமைப்பிற்கான நோக்கத்தையும் தனக்குள் விதைத்தது.

“முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தடயவியல் உளவியலோ (forensic psychology) மற்ற தடயவியல் அறிவியல் (forensic sciences) படிப்புகளோ முதுநிலைப் பட்டப்படிப்பு பாடங்களாக இல்லை,” என நினைவுக் கூறும் அவர், “எனவே நான் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகமாகி இருந்த பாடமான குற்றவியலை பாடமாக எடுத்துப் படித்தேன்” என்கிறார்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டப்படிப்பை நமது குற்றவியல் நிபுணர் நிறைவு செய்யப் போகும் வேளையில் ஜப்பானில் உள்ள டோக்கிவா பல்கலைக்கழகத்தில் (Tokiwa University) பாதிப்புக்குள்ளாக்குவதைப் (victimization) பற்றிய படிப்பான விக்டிமாலஜி (Victimology) என்பதில் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான வாய்ப்பினைப் பெற்றார். உஷாராணி மோகன் (Usharani Mohan) மற்றும் ஹேமா ராமச்சந்திரன் (Hema Ramachandran) என்பவர்களே பிரசன்னாவை தவிர ஜப்பானில் இந்தப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட இரு இந்தியர்களாக இருந்தனர். சென்னையை சார்ந்த இவர்கள் மூவரும் நேரடியாக பாதிப்படைந்தவர்களுடன் (victim)…
TO READ FULL STORY
Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.
Please sign up with your email below.
or Sign In with
We don’t spam! Read our privacy policy for more info.