கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு முந்தைய மாலை பொதிகை தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக மறைந்த பிரபல தமிழ் பேச்சாளர் மற்றும் எழுத்தாளருமான வலம்புரி ஜான் (Valampuri John) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தார். அது ஒரு அடுதல் (Baking) நிகழ்ச்சியாகும். “கேக் (Cake) என்பதை எதனால் கேக் என்று அழைக்கிறோம் தெரியுமா? ஏனென்றால் அது அவ்வளவு சுவையாக இருப்பதால் அனைவரும் அதனை திரும்பி திரும்பி ‘கேக்’கணும் (Cake’kanum) என்பதற்காகத் தான்” என நகைச்சுவையாகக் கூறினார். அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் வாய்விட்டு சிரிக்கத் துவங்கினர். பொதிகையில் இந்நிகழ்ச்சியை கண்டுகளித்தவாறு தன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்த ஆவடியில் வசித்து வந்த ஒரு சிறுமிக்கு வலம்புரி ஜானின் இந்த சொல்விளையாட்டு (Pun) பெருமளவில் அவளுக்குள் ஒரு ஆர்வத்தைத் தூண்டியது.
அந்த சிறுமியே நம் அணிச்சல் கலைஞரான (Cake Artist) பிந்து ஹெப்ஸிபா (Bindhu Hephzibah) ஆவார். பிந்து தன் பள்ளிப்பருவத்துக்குப் பின்னர் முதுகலை வணிக மேலாண்மையில் (MBA – Master of Business Administration) பட்டம் பெற்று பெருநிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். பெருநிறுவன பணியில் இருந்தமையால் வாழ்க்கை சீர்மையாக இருப்பது போல் இருந்தாலும் கூட அவருக்கு கலைகளின் மீது ஒரு தீரா ஆர்வம் இருப்பதை உணர்ந்தார். கலைப் புத்தகங்களைப் பதுக்கி தன்னுடன் எடுத்துச் செல்லும் பிந்து, தன் ஓய்வு நேரங்களில் தானாகவே ஓவியம் வரையும் நுட்பங்களைக் கற்றுக் கொள்வார். 2008-ஆம் ஆண்டை ஒட்டி உலகப் பொருளாதார நெருக்கடியோடு (Economic Recession) திறன்பேசியின் அதிவிரைவு வளர்ச்சியும் (Smartphone Boom) ஒன்றிற்று. “முன்பு எப்பொழுதும் இல்லாத வண்ணம் பல தகவல்களையும் சாதனங்களையும் அடையும் வாய்ப்பு எனக்கு இப்பொழுது கிட்டியது,” என திறன்பேசியின் வருகை எவ்வாறு அவர் தன் வாழ்க்கையை மாற்றியது எனப் பூரிப்புடன் விவரிக்கிறார் பிந்து.
தன் பெருநிறுவன வேலையை கைவிட்ட பிந்து, ஈரோட்டில் வருவாய்த் துறையில் (Revenue Department) தன் தந்தை நியமிக்கப் பட்டதால் அவரோடு அங்கு புலம்பெயர முடிவு செய்தார். அப்பொழுது தான், பிந்து தன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு கலைக் கூடத்திற்கு சென்றார்….
TO READ FULL STORY
Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.
Please sign up with your email below.
or Sign In with
We don’t spam! Read our privacy policy for more info.