மயிலாப்பூரில் வளர்ந்த வந்த ஆறு வயதான ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன் (Sruti Harihara Subramanian) என்பவருக்கு, விலங்குகள் மீதும், திறந்தவெளிகள் மீதும் ஒரு தனிப்பட்ட பிரியம் இருந்தது. தன் விடுமுறை நாட்களில் பச்சை பசேல் என்று இருக்கும் கேரளாவின் பசுமை நிலவெளிகளின் மத்தியில், ஒரு சிறிய நகரத்தில் வசித்து வந்த தனது தாத்தா பாட்டி வீட்டுக்கு அவர் செல்வது வழக்கம். அந்த மந்தமான சிறிய நகரில் அவருக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு செயல் என்னவென்றால், அங்கு இருக்கும் உள்ளூர் கடையின் படியில் அமர்ந்துக் கொண்டு அந்த கடைக்காரரோடு சேர்ந்து, அவரின் வாடிக்கையாளர்களுக்கு கோலி சோடா (Goli Soda) புட்டிகளைத் திறந்துக் கொடுப்பதே. ஒவ்வொரு முறை அது திறக்கப்படும் போதும் ‘பட்’ என்று கோலி விழும் சத்தத்தையும் ‘மடக் மடக்’ என்று சோடா குடிக்கப்படும் போது எழும் சத்தத்தையும் வைத்தே அந்த கண்ணாடி புட்டி மீண்டும் நிரப்பப்பட தயாராகிவிட்டது என்பதை கவனித்து கண்டறிந்து இருந்தார் அவர். தன் வாழ்வில் இந்த நிகழ்வானது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்த சின்னஞ்சிறு சிறுமி ஒருபோதும் அப்பொழுது நினைத்துப் பார்க்கவில்லை.

ஸ்ருதி வளர வளர தன் அறிவார்வமும் கூடவே வளர்ந்தது. தான் மனதார விரும்பும் விலங்குகளைக் கொண்டு தோலும் பட்டும் உருவாக்கப் படுகின்றது என்ற உண்மையை அவர் அறிய நேர்ந்த நாள் முதல், அவர் இவற்றால் செய்யப்படும் பொருட்களை முற்றிலுமாக புறக்கணித்து நனிசைவ (vegan) உணவு உண்பவராகவும் மாறினார். “அப்பொழுது தான் நான் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புடன் ஒரு வளங்குன்றா (sustainable) வாழ்க்கை முறை வாழ ஆரம்பித்திருக்கக் கூடும்,” என அவர் நினைவுக் கூறுகிறார்.

காலங்கள் உருண்டோட 2012-ம் ஆண்டு, தென்னிந்திய திரைப்படத் துறையின் ஒரு வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளராக முன்னேறிக் கொண்டு இருந்தார் ஸ்ருதி. “பணி நிமித்தமாக நான் உலகெங்கும் செல்ல நேர்ந்தது. சில நேரங்களில் நாங்கள் குக்கிராமங்களிலும் (remote villages) அல்லது காடுகளிலும் படப்பிடிப்பு செய்வோம். அவற்றை எல்லாம் கண்டு விட்டு சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பி வருகையிலேயே, நெகிழியால்…

TO READ FULL STORY

Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.

    or Sign In with

    We don’t spam! Read our privacy policy for more info.

      Be the first to receive the most updated stories from GOTN