நம்மில் பெரும்பாலானோர் கண்ணாடியை, எளிதில் உடையக்கூடியதாகவும், அச்சுறுத்தும் ஒரு பொருளாகவுமே எண்ணுவோம். ஆனால் கோலி சோடா கண்ணாடி கலைக்கூடத்தின் (Goli Soda Glass Studio) நிறுவனரான ராதிகா க்ரிஷ் (Radhika Krish) என்பவர் தன் அழகான கண்ணாடிக் கலையால் நம்முடைய அந்த எண்ணத்தை விரிசலடைய செய்கிறார். “ எனது சிறுப்பருவத்தில் நான் கண்ட “கோலி சோடா” புட்டிகள் (bottles) என் ஆவலைத் தூண்டுவதாக இருந்திருக்கின்றன. புட்டியிலிருந்து கோலியை வெளியில் எடுக்க நான் மணிக்கணக்கில் நேரம் செலவிட்டுள்ளேன்,” என ராதிகா தனது நீங்கா நினைவுகளை நினைவுக்கூறுகிறார். “கண்ணாடியைக் கொண்டு நான் கலை உருவாக்குவது எனது சிறுப்பருவ நினைவுகளை திரும்பக் கொண்டு வருகிறது. அதனாலேயே கோலி சோடா கண்ணாடி கலைக்கூடம் (Goli Soda Glass Studio) என்ற பெயரை வைத்தேன். கண்ணாடி, சோடா-சுண்ணாம்பு soda-lime) என்ற பொருளில் இருந்து செய்யப்படுவதாலும் இந்த பெயர் வைக்கப்பட்டது” என புன்முறுவலுடன் கூறுகிறார் ராதிகா.
எப்படி கண்ணாடி கலை என்பது ராதிகாவின் வாழ்க்கைத் தொழிலாக மாறியது? மேலாண்மை தகவல் அமைப்பில் (Management Information Systems) பட்டம் பெற்ற இவர் கேப்பிடல் ஒன் (Capital One) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் ஒரு மருந்தாக்க நிறுவனத்தில் (pharmaceutical company) வேலை செய்தார். சிறிது காலம் மகப்பேறுக்காக (maternity) அவர் பணிச்சுமையில் இருந்து இடைவேளை எடுத்துக் கொள்ள, அந்த இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் பொழுதுப்போக்கு செயலில் ஈடுபட நினைத்தார். அப்பொழுது தான் தற்செயலாக ஒஹியோ மாகாண பல்கலைக்கழகத்தில் (Ohio State University) கண்ணாடி கலைக்கான ஒரு வகுப்பினை கண்டறிந்தார். “நான் முதலில் வாரயிறுதியில் இதற்கான ஒரு அறிமுக வகுப்பிற்கு சென்று எனக்கு பிடித்திருக்கிறதா என பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். இது என் தினசரி வேலைகளுக்கு புறம்பான (extracurricular) ஒன்றே ஏனெனில் என் மகப்பேறுக்கு பின்னர் நான் எப்படியும் என் பணிக்கு திரும்புவதாகவே இருந்தது,” என சிரித்துக் கொண்டே நினைவுக் கூறுகிறார் அவர். “ஒரு வகுப்பு அப்படியே மற்றொரு வகுப்புக்கு இட்டுச் செல்ல அது மீண்டும் மற்றொன்றுக்கு இட்டுச் செல்ல அவ்வாறே நான் இந்த…
TO READ FULL STORY
Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.
Please sign up with your email below.
or Sign In with
We don’t spam! Read our privacy policy for more info.