ஆடை அலங்காரத் துறையின் முன்னோடி அடையாளங்களில் ஒருவரான ஐரிஸ் ஆப்ஃபெல் (Iris Apfel) முன்னொரு முறை, “என் ஆடை அலங்கார பாணியே (style) உங்களின் ஆடை அலங்கார பாணியாக இருக்க வேண்டும் என்பதில்லை. மேலும் ஆடை அலங்கார பாணி என்பது வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில்லை. பாணி என்பது ஒருவர் யார் என்பதை அவருக்கென இருக்கும் தனித்துவ வழியில் வெளிப்படுத்துவதே ஆகும்” எனக் கூறினார். மக்கள் அவரவர்களின் உடல்களை அரவணைக்கக் கற்றுக் கொள்ளும் முயற்சியில் ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் இவ்வுலகம் சுய வெளிப்பாடு (self-expression) மற்றும் தனித்துவத்தை நோக்கி நகர முற்படும் தருவாயில் பெரும்பாலான அதிக லாபம் ஈட்டும் முன்னணி ஆடை அலங்கார நிறுவனங்கள் (fast fashion brands) யாவும் மீளாய்வில் (scrutiny) ஈடுப்பட்டுள்ளன. சா (SAA) எனும் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் படைப்பாற்றல் மிக்க மேலாளர் மற்றும் நிறுவனர் ஆன ஆஷா விகாஷினி (Ashaa Vigashini) வலுவாக நம்புவது என்னவென்றால்—ஒரே உருவளவு (one-size) என்பது எல்லாருக்கும் பொருந்தாது என்பதையே.

SAA’s very own creative director and founder, Ashaa Vigashini

ஐரிஸ் ஆப்ஃபெலை போலவே ஆடை அலங்காரத் துறையில் ஆஷாவின் நுழைவும் தற்செயலாகவே நடந்தது. “எனது பள்ளிப்பருவத்தில் சதுரங்க விளையாட்டும், தமிழ்நாட்டின் பாரம்பரிய நடன வகைகளில் ஒன்றான பரதநாட்டியமுமே எனது வாழ்வின் மிகப் பெரிய பகுதிகளாக இருந்தன!” என புன்னகை கலந்த பூரிப்புடன் கூறுகிறார். பெரும்பாலான உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் மனக் குழப்பத்தைப் போலவே ஆஷாவும் கலைகளுக்கான தனது பெரும் ஆர்வத்தை பின்தொடர்வதா இல்லை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயிலும் பாதுகாப்பான பாதையை தேர்வு செய்வதா என்ற குழப்பத்தில் சிக்கித் தவித்தார்.

“என் பெற்றோர் என்னை ஒரு பணி ஆலோசகரிடம் (career counsellor) கூட்டிச் சென்றனர். அவர் என்னை வரையச் சொன்னார்,” என சற்று பொறுத்து பின்னர் உரக்க சிரிக்கும் அவர், “இந்நாள் வரை…

TO READ FULL STORY

Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.

    or Sign In with

    We don’t spam! Read our privacy policy for more info.

      Be the first to receive the most updated stories from GOTN