சன்னிபீ என துவங்கி பின்னர் தொழிலகங்களுக்கு இடையேயான வணிகத்தில் தடம் பதித்து வரும் வே கூல் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பயணம்

கார்த்திக் ஜெயராமன் (Karthik Jayaraman), சஞ்சய் தசாரி (Sanjay Dasari) மற்றும் கார்த்திக் உடன் தானியங்கி நிறுவனத்தில் வேலை செய்யும் சக ஊழியர்கள் சிலர் வார இறுதிகளில் கோயம்பேடு சந்தை அல்லது பாரிமுனையின் தானிய சந்தைப் போன்ற இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். சில மாதங்கள் செலவு செய்து அந்த சந்தைகளின் விநியோகச் சங்கிலியை (supply chain) கண்டறிவர். இவ்வாறே வே கூல் ஃபுட்ஸின் (WayCool Foods) பயணம் துவங்கியது. தானியங்கி வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் ஏன் சம்பந்தமே இல்லாமல் உணவு விநியோகச் சங்கிலியில் ஆர்வம் காட்டுகின்றனர் என யோசிக்குறீர்களா?

“ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தானியங்கித் துறையானது சரிவினைக் கண்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வருவது வழக்கம்,” என கூறுகிறார் கார்த்திக். இதற்கிடையில் இந்த துறையில் நிலவும் நெருக்கடியான போட்டியில் பெரும்பாலான நிறுவனங்களின் கவனமும் விநியோகச் சங்கிலியின் மீதே இருக்கும். மீண்டும் மீண்டும் நிகழும் இந்த நெருக்கடியான நிலைமையால் பெரிதும் நொந்துப் போன இத்துறையில் அனுபவசாலியான கார்த்திக், இன்னும் பேரளவு மக்கள் மீது பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நபர்கள் கொண்ட ஓர் குழுவை உருவாக்க முடிவு செய்தார். அதற்கான திறமையும் மனிதவளமும் தன் நண்பர்கள் வட்டாரத்தில் உள்ளது என அவர் நம்பினார். 

இதற்கிடையில் கார்த்திக்கின் சக ஊழியரும் குடும்ப நண்பருமான சஞ்சய் (Sanjay) அமெரிக்காவில் தனது வணிகப் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்ப, இருவரும் சேர்ந்து ஓர் துளிர் நிறுவனத்தைத் (start-up) துவங்கினர். இதற்கு முன்னரே இருவரும் இணைந்து துளிர் நிறுவனம் துவங்குவதற்கான முயற்சியில் பலமுறை ஈடுபட்டு உள்ளனர். “சுகாதாரத் துறையில் ஓர் துளிர் நிறுவனம் துவங்கும் எண்ணத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் முனைப்போடு இருந்தோம்,” என அந்த நினைவுகளை சற்று அலசுகிறார் துணை நிறுவனரான கார்த்திக். இதற்கான கருத்து பரிமாற்றத்தின் போதே உணவுத் துறையில் ஓர்…

TO READ FULL STORY

Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.

    or Sign In with

    We don’t spam! Read our privacy policy for more info.

      Be the first to receive the most updated stories from GOTN