இந்தியாவில் வளர்ந்து வரும் மின்வாகனத் துறையில் தடம் பதிக்க வரும் ராப்டீ நிறுவனம்
April 27, 2022
“இந்தியாவில் மின்வாகனத் துறையில் கடந்த பத்து ஆண்டுகளில் இரு நிறுவனங்கள் கொடி கட்டிப் பறந்து வருகின்றன. எனினும் இந்தியாவில் மின்வாகனத் துறையின் சந்தை என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது,” என விளக்குகிறார் ராப்டீ எனர்ஜி (Raptee Energy) நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியான தினேஷ் அர்ஜுன். அத்துடன் “ஏன் போக்குவரத்தில் எந்த வித மாற்றமும் இதுவரை நிகழவில்லை?” என்ற முக்கியமான கேள்வியையும் நம் முன் வைக்கிறார்.
அதிவேகமாக வளர்ந்து வரும் மின்சார இரு சக்கர வாகனத் துறையில் இன்று இருக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுள் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ராப்டீ துளிர் நிறுவனமும் ஒன்றாகும். ராப்டீ நிறுவனத்தின் தனித்துவம் என்ன? இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு ஏற்றவாறு இந்நிறுவனம் மின் வாகனங்களைத் தயாரித்து வருவதே இதன் தனிச்சிறப்பாகும். அதாவது இந்தியாவில் ஒரு குடும்பத்தில் வாங்கப்படும் இரு சக்கர வாகனமானது பல தலைமுறைகள் கைமாறி குறைந்தபட்சம் பன்னிரெண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தப்படும். இதனை மனதில் கொண்டு இந்நிறுவனம் தனது வாகனங்களை தயாரித்து வருகிறது.
பெரும்பாலான மின்வாகனத் துறையின் ஆரம்பக் காலக்கட்டத்தைப் போன்றே ராப்டீ நிறுவனமும் இரண்டு மேசைகள் கொண்ட ஓர் வண்டிக் கொட்டகையில் துவங்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு தினேஷ் அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை கையாளவும் இந்தியாவில் தான் துவங்கிய வாகன உற்பத்தி வணிகத்தை கையாளவும் இரு நாடுகளுக்கும் இடையே ஒவ்வொரு மாதமும் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. வார இறுதிகளில் அவர் சென்னை வரும்போதெல்லாம் அவரும் தனது கல்லூரியில் தனக்கு பிந்தைய ஆண்டில் பயின்ற கீர்த்திவாசன் ரவி என்பவரும் இணைந்து புதிதாக ஓர் வணிகம் துவங்குவதற்கான யோசனைகளை கலந்துரையாடுவர். மேலும் உற்பத்தி செய்யப்போகும் விலை பொருளின் மாதிரிகளை செய்து அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்துவர்.
இரு சக்கர வாகனத் துறையின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவுகளில் தினேஷுக்கு அனுபவம் இருந்தது. “இரு சக்கர வாகனங்கள் பாதுகாப்பான போக்குவரத்து முறை இல்லை என்றாலும் அனைவராலும் நான்கு சக்கர வாகனமான காரினை வாங்க முடியாது,” என கூறும் துணை…
TO READ FULL STORY
Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.
Please sign up with your email below.
or Sign In with
We don’t spam! Read our privacy policy for more info.