ஒரு மதிய வேளையில் அருண் குமார் (Arun Kumar) என்பவரும் அவரின் தங்கை SP பொன்மணியும் (SP Ponmani) மதுரையில் சிறுவயதில் அவர்கள் வாழ்ந்து வளர்ந்த வீட்டை சுத்தம் செய்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது ஒரு பெட்டகத்தை அங்கு கண்டனர். அந்த பெட்டகமானது, அவர்கள் சிறுவயதில் அணிந்து இருந்த முற்றிலும் பருத்தியால் ஆன ஆடைகளால் நிரம்பி இருந்தது. “அந்த துணியானது மிகவும் மென்மையாகவும், 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் பயன்படுத்தக் கூடிய வகையில் இருந்தது,” என தங்கள் வாழ்க்கைப் பணியினை மாற்றி அமைத்த அந்த சுவையான நிகழ்வினை பூரிப்புடன் நினைவுக் கூறுகிறார் பொன்மணி. கல்லூரிப் படிப்பை கோயம்புத்தூரில் நிறைவு செய்த பொன்மணி, ஆடை அலங்காரப் படிப்பில் (Fashion designing) பட்டம் பெற்று இருந்தார். அருண் வலைத்தள வடிவமைப்பு (website designing) மற்றும் உட்புற வடிவமைப்புத் (interior designing) திட்டங்கள் சிலவற்றில் சென்னை மற்றும் பெங்களூருவில் பணியாற்றியப் பின்னர் மதுரைக்கு திரும்பி இருந்தார். இவர்களின் வீட்டில், திருமண பேச்சுகள் வலம் வர துவங்கின. எனவே, இருவரும் தாங்கள் பெற்று இருக்கும் திறன்களை கொண்டு இந்த சமூகத்தில் ஒரு பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்போடு தொழில் முனைவில் அடி எடுத்து வைத்தனர்.

2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒட்டி அண்ணன்-தங்கை இருவரும் பத்து வகையான ஆடைகளை பிறந்த குழந்தைகளுக்கு வடிவமைப்பதற்காக கைத்தறியால் நூர்க்கப்பட்ட பருத்தியைத் (hand-spun cotton) தேடி அலைந்தனர். நீடிப்பு திறன் மற்றும் இதமான தன்மை ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு பொன்மணி இந்த ஆடைகளை வடிவமைக்கத் துவங்கினார். இவர்கள் துவங்கிய இந்நிறுவனத்துக்கு அம்பரம் (Ambaram – அம்பரம் என்றால் சங்கத் தமிழில் இதமான துணி என்று பொருள்படும்) எனும் அடையாளம் கொடுத்தனர். இவர்கள் விற்பனை செய்து வந்த இதமான ஆடைகளுக்கு இந்தப் பெயர் ஏற்ற அடையாளமாக இருக்கிறது. “நாங்கள் ஆடைகளை பற்பிணைகள் (zipper), பொத்தான்கள் (button) மற்றும் விரிசிரிகள் (elastic) இல்லாமல் வடிவமைக்க வேண்டுமென நினைத்தோம். ஏனெனில் அவை குழந்தையின் மிருதுவான தோலுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்,” என விவரிக்கிறார். இந்த பழைய மாதிரியான குழந்தைகள்…

TO READ FULL STORY

Hey there! We're glad you are interested in this story. As a start up publishing company, we try to know our readers, and would love for you to subscribe and let us know who you are.

    or Sign In with

    We don’t spam! Read our privacy policy for more info.

      Be the first to receive the most updated stories from GOTN